பொள்ளாச்சி கும்பலிடம் சிக்கிய இளம்பெண் கதறி அழும் காட்சிகள் !

0
பொள்ளாச்சி யில் காதல் வலை வீசி பெண்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த கும்பலிடம் சிக்கிய இளம் பெண் ஒருவர் கதறி அழும் பதை பதைக்க வைக்கும் காட்சிகள் வெளியாகி யுள்ளன. இதனை அடுத்து இந்த விவகாரத்தில் தொடர்புடை யவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்துள்ளது.
பொள்ளாச்சி கும்பலிடம் சிக்கிய இளம்பெண்


கோவை மாவட்டம் பொள்ளாச்சி யில் இளம் பெண்களு க்கும், மாணவி களுக்கும் பேஸ்புக் மூலம் காதல் வலை வீசி அவர்களை ஆபாசமாக படம் எடுத்து கும்பல் ஒன்று பணம் பறித்து மிரட்டி வந்தது. அந்த கும்பலை சேர்ந்த திருநாவுக்கரசு உள்ளிட்டோர் போலீசாரிடம் சிக்கி யுள்ளனர்.

இந்த நிலையில் தங்களிடம் சிக்கிய பெண்களை இந்த கும்பல் அடித்து துன்புறுத்தி ஆபாசமாக வீடியோ பதிவு செய்யும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. இந்த வீடியோவை பார்த்த பலரும் தங்களின் கோபத்தை யும், பதை பதைப்பையும் வெளிப்படுத்தி வருகின்றனர். 

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளி யிட்டுள்ள அறிக்கையில், பொள்ளாச்சி யில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளை காமுகர்கள் கூட்டம் ஒன்று கொடூரமான பாலியல் வன்முறைக் குட்படுத்தி யிருக்கும் அதிர்ச்சி தரும் செய்தியும் அது தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி யுள்ளதாக குறிப்பிட் டுள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவிகளின் எதிர்கால நலன் பாதுகாக் கப்படும் வகையில் விசாரணை நடைபெற வேண்டும் என அவர் வலியுறுத்தி இருக்கிறார். இதே போல் பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாசும், பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தின் பின்னணியில் உள்ளவர்களை அடையாளம் கண்டு கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி யுள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொள்ளாச்சி பகுதியில் 250க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமை களுக்கும், அதைத் தொடர்ந்து மிரட்டல் களுக்கும் ஆளாக்கப்பட்டு வருவதாக வெளியாகி யுள்ள செய்திகள் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்து வதாகக் குறிப்பி ட்டுள்ளார்.

இதயத்தை பதைபதைக்கச் செய்யும் இந்த பாலியல் குற்றங்களின் பின்னணியில் உள்ளவர்களை அடையாளம் கண்டு கைது செய்வதுடன், கடுமையான தண்டனை யையும் பெற்றுத் தர வேண்டும் என்றும் அன்புமணி வலியுறுத்தி யுள்ளார்.


இதனிடையே பொள்ளாச்சியை சேர்ந்த நாகராஜ் என்பவர், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப் பட்டுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. கட்சியின் கண்ணி யத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத் தாலும் அவர் நீக்கப் பட்டுவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதனிடையே இந்த விவகாரத்தில் தன் மீது களங்கம் விளைவிக்க எதிர்க் கட்சியினர் சதி செய்வதாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக அவதூறு வழக்க தொடர ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings