உடலுக்கு தேவையான சத்துக்களில் புரதம் இன்றியமை யாத ஒன்றாகும். தினசரி உணவில் எல்லா வகை சத்துக்களை சம விகிதத்தில் எடுத்து கொள்வது அவசியம். உடலின் வளர்ச்சிக்கு புரதம் எப்படி உதவுகிறதோ அதே போல உடல் எடை குறைக்கவும் உதவுகிறது.
சில உணவுகளில் உடலுக்கு தேவை யானதை விட அதிக படியான புரதம், கொழுப்பு மற்றும் கலோரிகள் இருக்கும். இதன் விளைவாக உடல் பருமனாகி விடும்.
அதனால் சீஸ், பால், சோயா, கோழி, மாடு, பன்றி ஆகிய வற்றின் இறைச்சிகளில் குறைந்த அளவு கொழுப்பே இருக்கிறது என்பதால் இதனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம். உடல் எடையை குறைக்க கூடிய சில புரத உணவுகளை பார்ப்போம்.
அதனால் சீஸ், பால், சோயா, கோழி, மாடு, பன்றி ஆகிய வற்றின் இறைச்சிகளில் குறைந்த அளவு கொழுப்பே இருக்கிறது என்பதால் இதனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம். உடல் எடையை குறைக்க கூடிய சில புரத உணவுகளை பார்ப்போம்.
க்ரீக் யோகர்ட் :
க்ரீக் யோகர்டில் மிக குறைந்த அளவு கொழுப்பு மற்றும் அதிகபடியான புரதம் உள்ளது. இது மிகவும் கெட்டியாகவும் க்ரீமியாகவும் இருக்கும். உங்கள் மாலை நேர பசியை போக்க, ஊட்டச் சத்துக்கள் நிறைந்த இந்த க்ரீக் யோகர்டை சாப்பிடலாம். மேலும் இதனை ஸ்மூத்தீஸ் மற்றும் ஓட்ஸுடன் சேர்த்து சாப்பிடலாம்.
பருப்பு வகைகள் :
பீன்ஸ், கொண்டைக் கடலை, மொச்சை பயிறு ஆகிய வற்றில் புரதம் நிறைந் திருக்கிறது. மேலும் இதில் நார்ச்சத்து, இரும்பு சத்து, ஃபோலேட், பொட்டாஷியம், பாஸ்பரஸ், கால்சியம் ஆகியவை அடங்கி யிருக்கிறது. உடல் எடை குறைக்க இதனை தினசரி உணவில் சேர்த்து சாப்பிட்டு வரலாம்.
முட்டை :
உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களும் முட்டையில் உள்ளது. புரதம் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்த முட்டையை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் உடல் எடை குறையும்.
மீன் :
கோழி மற்றும் இறைச்சியுடன் ஒப்பிடும் போது மீனில் மிக குறைந்த அளவே கொழுப்பு உள்ளது. குளிர்ந்த நீரில் வாழும் மீனில் அதிக படியான புரதம் மற்றும் ஒமேகா 3 இருக்கிறது என்பதால் ஒட்டு மொத்த உடல் ஆரோக்கி யத்திற்கும் மிகவும் நல்லது. உடல் எடை குறைக்க இறைச்சி களை தவிர்த்து, மீனை அதிகம் சாப்பிடலாம்.
பால் பொருட்கள் :
ஸ்கிம் மில்க், லோ ஃபேட் சீஸ், யோகர்ட் ஆகிய வற்றில் புரதம், கால்சியம் மற்றும் வைட்டமின் டி நிறைந்தி ருக்கிறது. இது எலும்பு களை உறுதியாக வைத்திருக்கும். இவற்றில் கொழுப்பு சத்துக்கள் மிகவும் குறைவு என்பதால் தினசரி உணவில் இதனை சேர்க்க தவற வேண்டாம்.
Thanks for Your Comments