செய்தியாளரைப் போல் இயங்கும் ரோபோ சீனாவில் !

0
உலகத்தில் தொடர்ந்து 'செயற்கை நுண்ணறிவு' சக்தியை வைத்து பலதர சாதனை களை செய்துவரும் சீனா தற்போது தொலைக் காட்சி துறையிலும் ஒரு புதிய அறிமுகத்தை வெளி யிட்டுள்ளது.


சீனாவின் சின்ஹூவா தொலைக்காட்சி நிறுவனம் கடந்த ஞாயிறன்று செய்தி வாசிக்கும் ரோபோவை அறிமுகம் செய்து அசத்தியுள்ளது. உயிருள்ள மனிதனைப் போல் இருக்கும் இந்த ரோபோ செய்தி யாளர்கள், நிஜத்தில் செய்தி யாளர்கள் செய்யும் முக பாவங்களை சற்றும் வேறுபாடு இல்லாமல் செய்கின்றது.

இந்த ரோபோக்கள் 'செயற்கை நுண்ணறிவு' சக்தியால் இயங்குகின்ற நிலையில், சின்ஹூவா தொலைக்காட்சி நிறுவனம் இந்த ரோபோக்கள் செய்திகளை வாசிப்பது போல் ஒரு நிமட வீடியோ பதிவை வெளி யிட்டுள்ளது.


'ஜின் ஜியோமெங்' என்னும் இந்த பெண் ரோபோட், கியூ மெங் என்னும் செய்தி யாளரை மாதிரியாகக் கொண்டு வடிவமைக்கப் பட்டுள்ளது. அழகாக வெட்டப்பட்ட சிகை, பிங் நிறத்தில் உடை மற்றும் அதற்கு ஏற்றவாறு காதணி களை அணிந்து செய்தி வாசிக்கும் இந்த ரோபோட், மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

மேலும் ஆண்கள் உடையணிந்து செய்திகளை வாசிக்கும் இரண்டு ரோபோக்கள் கடந்த நவம்பர் மாதம் சின்ஹூவா நிறுவனம் அறிமுகம் செய்தது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings