பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் புகார்தாரர்கள், குற்றம் சாட்டப் பட்டிருப்பவர்கள் என இரு பிரிவுகளிலுமே பல்வேறு கட்சி களை சேர்ந்த நபர்கள் இருப்பதாக சொல்கிறார்கள்.
முதலில் தாங்கள் தாக்கப் பட்டதாக போலீஸில் திருநாவுக்கரசு தரப்பு தான் புகார் செய்திருக்கிறது.
பெண்ணின் தரப்பு போலீஸூக்கு பயந்து தலைமறை வாகி இருக்கிறார்கள். அவர்கள் பிறகு வேறு ஒரு நபர் உதவியுடன் தொகுதி எம்எல்ஏ என்ற முறையில் ஜெயராமனை அணுகி யுள்ளனர்.
ஜெயராமனும் வீடியோ விவகாரம், பாலியல் துன்புறுத்தல் விஷயங் களை கணக்கில் கொண்டு, ‘ஏய்யா நீங்கதானே புகார் தந்திருக் கணும்.
அவங்கள்ல ஓடி ஒளிஞ்சு திரியணும்!’ என சொல்லி அவர் களை போலீஸில் புகார் செய்யச் சொல்லி யிருக்கிறார்.
அவர்களும் பெண் வன்கொடுமை புகார் தரவே தான், ஜெயராமன் சிபாரிசுடன் திருநாவுக்கரசு தரப்பில் 3 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.
திருநாவுக்கரசு ஆஸ்பத்திரி யில் அட்மிட் ஆகி, ஒரு கட்சியின் பிரமுகரை அணுக, அவர் தான் திருநாவுக்கரசுக்கு இப்படியெல்லாம் அரசியல் ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்ததாக சொல்லியிருக் கிறார்கள்.
அதை ஒரு கட்சியின் ஐடி விங்க் சாமர்த்திய மாக பயன் படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே இதில் ஒரு பிரபல மான நபர், குறிப்பிட்ட ஒரு பெண்ணின் கதறல் வீடியோவை மட்டும் ரூ. 40 ஆயிரத்துக்கு வாங்கி வெளியிட்டிருப் தாகவும் சொல்கிறார்கள்.
அதுவும் 40 நிமிடம் ஓடக்கூடிய காட்சிகள் 4 நிமிடமாக சுருக்கி டப்பிங் செய்தே வெளியிட்டிரு க்கிறார்கள். ‘இதில் அகப்பட்டது நான்கைந்து வீடியோக்கள் தான்.
சில பெண்களை மட்டுமே அதில் போலீஸ் அடையாளம் கண்டுபிடித் திருக்கிறது. அவர்களில் இருவர் திருமணமாகி குழந்தை களை வைத்திருக்கி றார்கள்.
நாங்கள் எங்களுடன் 4 பெண்களை புகார் தரவும் தயார் படுத்தி யிருந்தோம். போலீஸூம் தன் தரப்பில் 4 பெண்களை புகார் தர தயார் படுத்தி யிருந்தது.
இதில் எதிர் பாராமல் வீடியோ வெளியாகி அரசியல் ஆகி விட்டது. அதனால் புகார் தர முன் வந்த பெண்கள் எல்லாம் பயந்து ஒதுங்கி விட்டார்கள்.
நாங்கள் நடந்ததை எங்கள் பெண்ணின் குரலாய் பதிவு செய்து இன்னும் சில நாட்களில் வெளியிட முடிவு செய்துள்ளோம்!’’ என்பது புகார் தந்த பெண் தரப்பினர் நம்மிடம் பேசியது ஆகும்.
Thanks for Your Comments