OPS -யிடம் பொள்ளாச்சி விவகாரத்தில் சரமாரி கேள்வி எழுப்பிய மாணவி !

0
நாடாளுமன்ற வேட்பாளரான தன் மகனுக்கு பிரச்சாரத்தை மதுரை அலங்கா நல்லூரில் தொடங்கிய ஓபிஎஸ் நடந்தே ஓட்டுகேட்டு வர. அங்கு பள்ளி, கல்லூரி மாணவிகள் பேருந்துக் காக காத்திருந்த வேளையில்.. அதில் இரு மாணவிகள் தைரியமாக, 'சார் நீங்க துணை முதல்வர் தானே கொஞ்சம் நில்லுங்க' என்றதும் சிரித்து கொண்டே அருகில் வந்த ஓ.பி.எஸ், 'என்னம்மா நல்லா படிங்க பரிச்சைக்கு போரிங்களா?' என்றதும் 'ஆமா சார் என்னை போன்ற மகள் இல்லையா? உங்களுக்கு?'
பொள்ளாச்சி விவகாரம்


ஏன்மா? பொள்ளாச்சி யில் என்னை போன்ற மாணவிகளை சீரழிச்சிருக் கிறாங்க. கடந்த 7வருசமா நடந்ததாக சொல்கிறார்கள். கடந்த வருடம் புகார் கொடுத்தும் அதை நீங்கள் கண்டு கொள்ளவில்லை ஏன்? உங்க கட்சிகாரர்களே குற்றவாளி யாக இருப்பதாலா? அப்ப கட்சிதான் உங்களுக்கு முக்கியமா? மக்கள் இல்லையா? உங்களிடம் தானே நாட்டை ஒப்படைத்திருக் கிறோம்.

பதில் சொல்லிட்டு போங்க சார் எங்க அப்பாவும் உங்க கட்சி தான். எங்க வீட்டில் கூட அம்மா படம் தான் இருக்கும். என்ன சொல்றீங்க. என்று வழியை மறித்து பேச அருகிலிருந் தவர்கள் அந்த மாணவியை அதட்ட யாரும்மா உங்க அப்பா? அது எதுக்கு எனக்கு கேட்கணும் போல இருந்தது கேட்டேன் என்றார் அந்த மாணவி. அதற்கு ஓ.பி.எஸ் வணக்கம்மா நீ சொல்றது சரி தான். அதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம். 

குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது. தைரியமாக வந்து கேள்வி கேட்கிற பாரு இது தான் ஜனநாயகம்... உன் தைரியத்தை பாராட்டுகிறேன் . என்று சொல்லி கொண்டே நகர்ந்தார். அமைச்சர் உதய குமாருக்கு தகவல் போக பதறி அடித்து வர அவரை தடுத்த ஓ.பி.எஸ். பிரச்சாரத்தை பார்ப்போம் உடனே ஜீப்பை கொண்டு வந்து அதில் ஏறி பிரச்சாரத்தை தொடங்கினார்.
OPS -யிடம் சரமாரி கேள்வி எழுப்பிய  மாணவி !


நாம் அந்த மாணவியை நெருங்கி என்னமா தைரியமா கேட்டீங்க என கேட்க, ஆமா சார் நீங்க யாரு? நான் நக்கீரன் பத்திரிக்கை என்றதும் நக்கீரனா என்று புருவத்தை உயர்த்தி, என்னசார் இன்னைக்கி எல்லாமே நான் நினைத்தது எல்லாம் நடக்கிறது... முதல்வரை நேருக்கு நேரா கேட்கணும் என்று இருந்தேன் யதார்த்தமா கல்லூரிக்கு போக நின்று கொண்டு இருந்தேன் ஓட்டு கேட்டு முதல்வரே வருகிறார் என்றார்கள். 

என்னால் தாங்க முடியவில்லை. அவரை வழிமறித்து கேட்டு விட்டேன். அந்த நாய்களை கொல்லணும் சார். உங்க ஆசிரியர் வீடியோ பார்த்து கொதிச்சிட்டேன் சார். 250 பெண்கள் பாதிக்க பட்டிருக்காங்க என்கிறார்கள். நான்கு பேரை மட்டும் பிடித்து மற்ற நபர்களை காப்பாற்ற பார்கிறார்கள். ஆளும் கட்சிகாரர்களே இருக்கிறதா தகவல் ஆதார பூர்வமாக இருக்கிறப்ப ஆளும் தரப்பு அவர்களை ஏன் காப்பாற்ற நினைக்கிறாங்க. 

கட்சி எதுக்கு சார் மக்களுக்காக தானே. அது தான் கேட்டேன். நான் எதுக்கும் பயபட மாட்டேன். எங்க அப்பா யாரு என்று என்னை கேட்கிறார்கள். நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். இது வீரம் மிக்க அலங்கா நல்லூர் பூமி. அண்ணே நக்கீரன் ஆசிரியருக்கு என் நன்றியை சொன்னேனு சொல்லுங்க சார் பஸ் வந்திருச்சு என்று ஓடிசென்று பேருந்தில் ஏறி சென்றார் மாணவி மோகன ப்ரியா. நாம் உறைந்து நின்றோம் அந்த மாணவியில் வீரத்தை பார்த்து. மண்ணுக்கேத்த பொண்ணு... நக்கீரன்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings