மன்னார்குடி யில் ‘மதராஸ் ஓட்டல்’ என்று ஓர் உணவகம் உண்டு. அந்நாட்களில் அரசு இயக்கிய ‘திருவள்ளுவர்’ விரைவுப் பேருந்துகள் ‘சென்னை’ பெயரைச் சுமந்திருக்கும். மதராஸ், சென்னை எனும் வார்த்தைகள் அறிமுக மானது இப்படித் தான்.
ஒரு நாள் அம்மாவிடம் கேட்ட போது, “தமிழ்ல சென்னை; அதைத் தான் இங்கிலீஷ்ல மெட்ராஸ்னு சொல்வாங்க” என்றார் சுருக்கமாக. பின்னாளில், சென்னை வரலாற்றைத் தமிழில் எழுதிய ஆய்வாளரான நரசய்யாவைச் சந்தித்த போது அவர் சொன்னார்,
“சென்னப் பட்டினம் வேறு; மதராசப் பட்டினம் வேறு. இரண்டுமே ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்பே இங்கே இருந்த கிராமங்கள். இந்தச் சோழ மண்டலக் கடற் கரையின் பல கிராமங்கள் குறைந்தது சில ஆயிரம் வருஷங்கள் பழமை யானவை.
ஆனால், ஆங்கிலேயர்கள் வந்த பிறகு தான் இந்த ஊரே உருவானது போல ஒரு தோற்றத்தை வந்தேறிகள் உருவாக்கி விட்டார்கள்.” சென்னை ரொம்ப நாட்கள் பீதிக்குரிய ஒரு ஊராகவே மனதில் நிலைத்திருந்தது.
ஊரில் சென்னைக்கு பஸ் ஏற நிற்கும் போது மட்டும் பார்ப்பவர்கள் எல்லோரும், “பார்த்துடா, பத்திரம்டா” என்று உருகி உருகி எச்சரித்த தெல்லாம் கூடக் காரணமாக இருக்கலாம். எந்த அளவுக்கு அது பீதி தந்தது என்றால், பேருந்தில் துணிப்பையைக் கூடக் கீழே வைக்கப் பயந்து மடியிலேயே வைத்துக் கொண்டு வரக்கூடிய பீதியைத் தந்தது.
வீட்டில் ஐந்நூறு ரூபாய் கொடுத்து விட்டால், அதை பத்து, ஐம்பது ரூபாய் நோட்டுகளாக மாற்றி சட்டைப் பையில் இரண்டு நோட்டுகள், பேன்ட்டின் இரு பக்கப் பைகளிலும் இரண்டிரண்டு நோட்டுகள், பின் பையில் இரண்டு நோட்டுகள், இடுப்புப் பையில் ஒரு நோட்டு, துணி மூட்டையில் ஒரு நோட்டு என்று பதுக்கி, தடவித் தடவிப் பார்த்துக் கொண்டே வரும் அளவுக்குப் பீதியைத் தந்தது.
சென்னை வந்து இறங்கி விட்டால், யாராவது கொஞ்சம் உற்றுப் பார்த்தால், முகத்தில் பிளேடு துப்பி விடுவார்களோ என்று தோன்றும். யாராவது கொஞ்ச தூரம் நம் பின்னாலேயே வருவது போல இருந்தால், ‘ஜேப்படித் திருடர்களாக இருப்பார்களோ?’ என்று பயமாக இருக்கும்.
இரவு நேரங்களில் விடுதிகளில் தங்க நேர்ந்தால் தூக்கம் பிடிக்காது. இவ்வளவைத் தாண்டியும் அந்நாட்களி லேயே சென்னைக் காரர்களிடம் ஒரு விஷயம் பிடித்தது, நண்பர்களிடம் பீற்றிக் கொள்ளும் அளவுக்கு: “யார்கிட்ட விலாசம் கேட்டாலும் நின்னு நிதானமா சொல்றாய்ங்க மாப்புள.”
படிப்பு முடிந்து வேலை தேடும்போது பெரும் பாலான பத்திரிகைகள் சென்னையில் இருந்தாலும், மறந்தும் கூட சென்னைக்கு வரக் கூடாது என்பது ஒரு வைராக்கிய மாகவே இருந்தது, பல ஆண்டுக் காலத்துக்கு. இப்போது சென்னை வாசிகள் மீது பயம் இல்லை. ஆனாலும், இந்த ஊர் பிடிக்க வில்லையே!
வெயில் நாள் என்றால் கொளுத்தும், மழை நாள் என்றால் மிதக்கும்; ஐயோ! எங்கு பார்த்தாலும் எறும்புகள் போல ஊர்ந்து கொண்டிரு க்கும் ஜனம், சாக்கடை, புழுக்கம், புழுதி, புகை… என்ன ஊர் இது என்ற நினைப்பு. சென்னை தான் வாழ்க்கை என்றாகி, இந்த ஊரைத் தெருத் தெருவாகச் சுற்ற ஆரம்பித்த போது தான் புரிய ஆரம்பித்தது, என்ன மாதிரியான ஒரு ஊரை எப்படி நாசமாக்கி விட்டோம் நாம்!
கடற்கரையை ஒட்டி ஒரு நகரம், அதனூடே இரு நதிகள், ஒரு கால்வாய், ஊர் விரிய விரிய ஏரிகள், இடை யிடையே சிறு மலைகள், சிறு வனங்கள்… ஒருகாலத்தில் கூவத்தில் அன்றாடம் படகில் சென்று மீன் பிடித்திருக் கிறார்கள். கரையில் நின்று காத்திருந்து மீன் வாங்கிச் சென்றிருக் கிறார்கள்.
படகுச் சவாரி நடந்திருக் கிறது. படகுப் போட்டி நடந்திருக் கிறது. இன்றைக்கும் கூட, கல்லாற்றின் கிளை நதியாகப் பிரியும் கேசாவரத்தில் கூவம் சாக்கடையாக இல்லை. ஒரு நதியை எவ்வளவு கழிவுகளைக் கொட்ட முடியுமோ கொட்டி நாம்தான் மாபெரும் சாக்கடையாக்கி இருக்கிறோம்.
கூழைக் கடாக்கள், நீலத்தாழைக் கோழிகள், நாமக் கோழிகள், முக்குளிப்பான்கள், நீலவாலிலைக் கோழிகள், பூநாரைகள் என்று பறவைகள் குவியும் பள்ளிக் கரணை போன்ற ஒரு சதுப்புநிலப் பகுதிக்கு அருகில் ஊர் குப்பையை யெல்லாம் கொட்டி, கொளுத்தி விடும் மடத்தனத்தை நம்மைப் போல வேறு யாரேனும் செய்வார்களா!
தமிழகத்தில் எத்தனையோ கிராமங்களில் இன்றைக்கு நிலத்தடிநீர் மட்டம் ஆயிரம் அடிக்குக் கீழே சென்று விட்டது. சென்னைக்கு வந்த புதிதில் குடியேறிய சைதாப்பேட்டை வீட்டில், கிணறு உண்டு. பத்தடி ஆழத்தில் தண்ணீர் உண்டு.
வீட்டின் எந்த மூலையில் மழைத்துளி விழுந்தாலும் கிணற்றில் வந்து விழும் வகையில் சேகர அமைப்பைக் கட்டியிருந்தார் வீட்டுக்காரர். கிணற்றடி யில் வாராவாரம் மஞ்சள், குங்குமம் பூசி பூஜிப்பார். “நாம அதுக்கு மரியாதை செஞ்சா, அது நமக்கு மரியாதை செய்யும்” என்பார். இன்றைக்கும் பூஜை நடக்கிறது; கிணற்றில் தண்ணீர் இருக்கிறது.
சென்னைக்கு என்று ஒரு நீண்ட வரலாறு இருக்கிறது. பெருமை கொள்ளும் பன்மைக் கலாச்சாரம் இருக்கிறது. மனதைக் கொள்ளை கொள்ளும் பல இடங்கள் இங்கே இருக்கின்றன. அற்புதமான ஒரு வாழ்க்கை இங்கேயும் இருக்கிறது. கேட்காமலே உதவிக்கு வரக் கூடிய, உதவி விட்டு அவர்கள் போக்கில் போகக்கூடிய அற்புதமான மனிதர்கள் இருக்கிறார்கள்.
எல்லா வற்றையும் தாண்டி சென்னையை யும் அதுபற்றிய நினைவு களையும் நாசமாக்குவது எது?நம்முடைய மனதின் அடியாழத்தில் கசந்து புகையும் வெறுப்பு தான் என்று தோன்றுகிறது. நமக்குச் சொந்த ஊரின் மீது ஒரு காதல் இருக்கிறது. இளவயதுக் காதல் போல.
அந்தக் காதல் நீடித்து, கல்யாணமும் கூடியிருந்தால் சந்தோஷம் தான். ஆனால், பலருக்கு அது வாய்ப்ப தில்லை. ஏன் வாய்ப்ப தில்லை என்று கேட்டால், அரசாங்கக் கொள்கைகள் - அதிகாரக் குவிப்பு - நகர் மயமாக்கல் - சிற்றூர்கள் புறக்கணிப்பு - நம்முடைய குடும்பச் சூழல் என்று காரணங் களை அடுக்கலாம்.
எப்படியோ, நமக்குச் சோறு போடும் திராணிகூட இல்லாதவை யாக நம்முடைய சொந்த ஊர்களை மாற்றி விட்டோம். ஆனால், நிறைவேறாத அந்தக் காதல் தந்த சோகத்தையும் வலியையும் வெறுப்பாக்கி, நமக்குச் சோறு போடும் இந்த நகரின் மீது வெறுப்பைக் கக்குகிறோம்.
இந்த நகரில் ஒரு செடியை நடும் பிரியம் கூட நம்மிடம் இல்லையே ஏன்? இந்த ஊர் நமது இல்லை. இந்த ஊருக்கான கடமைகள் நமது இல்லை. இது பணம் சம்பாதிப்ப தற்கான ஊர், சூறையாடு வதற்கான ஊர், கொள்ளை யடிப்பதற்கான ஊர். எழுத்தாளர் ஜோ டி குரூஸுடன் சில மாதங்களு க்கு முன் கடற்கரை க்குச் சென்றிருந்தேன்.
இயல்பாக ஏறி ஒரு படகில் உட்கார்ந்த குரூஸ் கடலைப் பற்றிக் கதைக்க ஆரம்பித்தார். சென்னை கடல் பகுதியில் என்னென்ன மீன் வகைகள் கிடைக்கும், எங்கே ஆழம் அதிகம், எங்கே பாடு அதிகம், ஆழ்கடல் மீன் தொழில் எப்படி, கடல் தங்கல் எப்படி என்று அவர் பாட்டுக்குப் பேசிக் கொண்டி ருந்தார்.
பேச்சினூடே சொன்னார், “எனக்கு எங்கூர் கடக்கரைக்கும் ராயபுரம் கடக்கரைக்கும் பெரிய வித்தியாசம் தெரியலீங்க.” கடலையே பார்த்துக் கொண்டிருந்தவர் கொஞ்சம் இடைவெளி விட்டு மீண்டும் சொன்னார்: “கடலு சோறு போடுற தாயின்னா, மண்ணும் அப்படித் தானே
Thanks for Your Comments