தமிழகத்தில் கோடை காலம் இன்னும் தொடங்காத நிலையில் வெயில் வாட்டி வதைக்கத் தொடங்கி யுள்ளது. அதிக பட்சமாக மதுரையில் 106 டிகிரியாக வெப்ப நிலை பதிவாகி இருக்கிறது. வழக்கமாக தமிழகத்தில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை வெயில் காணப்படும்.
ஆனால் இந்த மாதத்திலேயே பல்வேறு மாவட்டங் களில் வெயில் கொளுத்தி எடுக்கத் தொடங்கி விட்டது. தமிழகத்தில் பரவலாக நீர் ஆதாரங்கள் வெயில் காரணமாக ஆவியாகத் தொடங்கி விட்டன. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நெருங்கிக் கொண்டி ருக்கிறது.
இந்த நிலையில் சுமார் 10 இடங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன் ஹீட்டை தாண்டி பதிவாகி இருக்கிறது. அதிக பட்சமாக மதுரை விமான நிலையத்தில் வெயிலின் அளவு 106 டிகிரி பாரன் ஹீட்டாக பதிவாகி யுள்ளது.
இதனைத் தவிர்த்து நெல்லை, திருச்சி, சேலம், தர்மபுரி, திருத்தணி, வேலூர், கரூர் உள்ளிட்ட இடங்களில் வெயில் 100 டிகரி ஃபாரன் ஹீட்டை தாண்டி யுள்ளது. இந்த தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி யிட்டுள்ளது.
Thanks for Your Comments