விஸ்வரூபம் எடுத்துள்ள பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கும்பல் தலைவனாக செயல்பட்ட திருநாவுக்கரசு எம்.பி.ஏ. பட்டதாரி ஆவார். வசதியான குடும்பத்தை சேர்ந்த இவர் தற்போது வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார்.
சொகுசு கார், பண்ணைத் தோட்டம் என ஆடம்பரமாக வாழ்ந்து வரும் இவர் 2011-ம் ஆண்டு முதல் 2016- வரை கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்த போது ‘பிளே-பாயாக’ வலம் வந்துள்ளார். இவரது தோழி ஒருவர் மூலமாக திருநாவுக்கரசு க்கு ஏராளமான மாணவிகளின் பழக்கம் கிடைத்துள்ளது.
அவர்களிடம் இருந்து செல்போன் எண் வாங்கிய திருநாவுக்கரசு, அதனை தனது நண்பரும், என்ஜினீயருமான சபரி ராஜனிடம் கூறி உள்ளார். நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் சபரிராஜன் தனது பேச்சால் மாணவிகளை மயக்கி உள்ளார். தனது வலையில் சிக்கிய மாணவிகளை சபரிராஜன் ஜாலியாக ‘பிக்னிக்’ போகலாம் என அழைத்துள்ளார்.
அதை நம்பி வந்த மாணவிகளை சபரிராஜன், திருநாவுக்கரசின் காரில் ஏற்றி ஆள் நடமாட்டம் இல்லாத ஒதுக்குப் புறமான இடத்துக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு மாணவிக ளிடம் சபரிராஜன் சில்மிஷ லீலைகளை அரங்கேற்று வதை திருநாவுக்கரசு மற்றும் அவரது நண்பர்கள் மறைந்து நின்று வீடியோ எடுத்துள்ளனர்.
பின்னர் அந்த வீடியோக் களை காட்டி மிரட்டி மாணவிகளை, திருநாவுக்கரசு க்கு சொந்தமான பண்ணைத் தோட்டத்து க்கு அழைத்து சென்று தங்களது இச்சைக்கு பலியாக்கி உள்ளனர். படித்த, பணம் படைத்த வாலிபர்க ளான இவர்களிடம் கல்லூரி மாணவிகள் மட்டுமல்லாது, சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் உள்ள பெண்கள் மற்றும் குடும்பப் பெண்களும் சிக்கி சீரழிந்துள்ளதாக கூறப்படு கிறது.
அவர்கள் மானம் கருதி போலீசில் புகார் கொடுக்காதது இந்த கும்பலுக்கு மேலும் வசதியாகி போய் விட்டது. தற்போது கைதாகி உள்ள திருநாவுக்கரசு, சபரிராஜன், ஜவுளிக்கடை அதிபர் சதீஷ், வசந்தகுமார் ஆகிய 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டிய ராஜன் மேலும் கூறியதாவது:-
இந்த வழக்கில் போலீஸ் விசாரணையில் எந்த பாரபட்சமும் காட்ட வில்லை. கைதானவர் களின் செல்போன்களில் 4 வீடியோக்கள் மட்டுமே இருந்தது. அதில் உள்ள பெண்களை அடையாளம் காணவும், அவர்களிடம் இருந்து வாக்கு மூலம் பெற்று இவ்வழக்கில் மேலும் ஆதாரங்களை திரட்டவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்தால் அவர்களின் பெயர் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். இந்த கும்பலுக்கு ஒரு பெண் உள்பட யார் -யாரெல்லாம் உதவி செய்தார்கள்? என்று விசாரித்து வருகிறோம். அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுவாக பெண்கள், மாணவிகள் சமூக வலை தளங்களில் தங்களுக்கு தெரியாத வர்களுடன் பழக வேண்டாம். தேவை யில்லாதவர்கள் ‘பிரண்ட் ரிக்வஸ்ட்’ கொடுத்தால் அதை ஏற்க கூடாது. தங்களின் புகைப் படங்கள், வீடியோக் களை தெரியாதவர் களுடன் பகிர வேண்டாம்.
அதையும் மீறி யாரேனும் தொந்தரவு செய்தால் தைரியமாக புகார் கொடுக்கலாம். உங்களது விவரங்கள் ரகசியமாக வைத்து, புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்து குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும்.
Thanks for Your Comments