மகாராஷ்டிரா வில் பப்ஜி விளையாட்டில் மூழ்கிப் போன இரண்டு இளைஞர்கள் தங்கள் உயிரையே இழந்துவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத் தியுள்ளது. `பப்ஜி’ இளைஞர் களை அடிமையாக்கி வருகிறது. `Player Unknown’s Battlegrounds’ இது தான் PUBG-யின் விரிவாக்கம். இந்தியாவு க்குள் சில மாதங்கள் முன்னர் தான் காலடி எடுத்து வைத்தது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தன்வசப் படுத்திக் கொண்டது. பப்ஜி கேமில் சிறுசிறு குட்டித் தீவுகளை உள்ளடக்கிய ஒரு பெரிய தீவில் 100 பேர் களமிறக்கப் படுவார்கள், ஒருவரை ஒருவர் வீழ்த்தி கடைசியில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்தான் வெற்றியாளர்.
இந்த விளையாட்டை நண்பர்களு டனும் இணைந்து விளையாட லாம். உயர் தொழில் நுட்பம், உயர்தர கிராபிக்ஸ் காட்சிகள் இவை தான் பப்ஜியின் ப்ளஸ். இதனால் தான் இளைஞர்கள் இளைஞிகள் இதில் மூழ்கிப் போகின்றனர். குறிப்பாக, கல்லூரி மாணவர்கள் தனித் தனி க்ரூப்கள் அமைத்து முழுநேரமும் பப்ஜியில் மூழ்கித் திளைக்கின்றனர்.
இதனால் பலர் படிப்பையும் கோட்டை விடுகின்றனர். தற்போது பப்ஜி மோகம் சற்று குறைந்தி ருந்தாலும், இன்னும் சிலர் பப்ஜிக்குள் மூழ்கிக் கிடக்கின்றனர். இந்த நிலையில், மகாராஷ்டிரா வில் உள்ள ஹிங்கோலி பகுதியில் கடந்த சனிக்கிழமை (16.3.2019) அன்று, ரயில்வே தண்ட வாளத்துக்கு அருகே அமர்ந்து நாகேஷ் கோர், சுவப்னில் அன்னப்பூர்ணே ஆகிய இரண்டு இளைஞர்கள் பப்ஜி கேம் விளையாடி யுள்ளனர்.
அப்போது ஹைதராபாத்தி லிருந்து அஜ்மீர் செல்லும் ரயில் வந்துள்ளது. இதைக் கவனிக்காமல் தொடர்ந்து விளையாடிக் கொண்டே இருந்தவர்கள் மீது ரயில் பாய்ந்தது. ரயிலில் அடிபட்டு இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந் துள்ளனர்.
இருவரின் சடலங் களையும் பார்த்த அப்பகுதியில் வசிக்கும் மக்கள் போலீஸாரு க்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், சடலங்களைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
Thanks for Your Comments