25 ஆண்டுகளில் தண்ணீர் இல்லாத நாடாக மாறும் இங்கிலாந்து !

0
'அடுத்து வரும் 25 ஆண்டுகளு க்குள், இங்கிலாந்து மிகப்பெரிய தண்ணீர்ப் பற்றாக் குறையைச் சந்திக்கும்' என அந்த நாட்டின் சுற்றுச்சூழல் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி எச்சரித்துள்ளார். சுற்றுச்சூழல் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் பெறப்பட்ட தரவுகளின் படி இந்த எச்சரிக்கை தரப்பட்டுள்ளது. 
தண்ணீர் இல்லாத நாடாகும் இங்கிலாந்து


உயர்ந்து கொண்டிரு க்கும் இங்கிலாந்தின் மக்கள் தொகைக்கு ஏற்ப தண்ணீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாது. காலநிலை மாற்றத்தின் விளைவாக தண்ணீர்ப் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. இன்னும் 25 ஆண்டுகளில் இந்த நிலைமை மோசமாகி விடும். நாம், மாற்று நடவடிக்கை களை எடுக்க வில்லையெனில், தேவையான தண்ணீரை வழங்க முடியாது.

"சிகரெட் புகையைக் குழந்தையின் முகத்தில் ஊதுவதை எப்படி இந்தச் சமூகமே ஏற்காதோ, அதைப் போல தண்ணீரை வீணாக்கு வதையும் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளாத செயலாக மாற்ற வேண்டும்" என்கிறார் சுற்றுச்சூழல் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான சர் ஜேம்ஸ் பெவன் (Sir James Bevan). 

மேலும் அவர் கூறுகையில், 2040-ம் ஆண்டு வாக்கில் நம்முடைய பெரும்பாலான கோடைக் காலங்கள் 2003 -ம் ஆண்டின் வெப்ப அலைகளை விட மிகவும் வெப்பமாக இருக்கும். அத்தகைய கோடைக் காலங்களில் பல நதிகள் 50% - 80% அளவிற்குத் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படும் எனவும் எச்சரிக்கிறார்.
தண்ணீர் இல்லாத நாடு
இங்கிலாந்தில், தனிநபர் ஒருவர் ஒரு நாளுக்கு 140 லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்து கிறார். இதை முறைப் படுத்துவதன் மூலம் 100 லிட்டராகக் குறைக்க முடியும். மேலும், இங்கிலாந்தில் மூன்றில் ஒரு பங்கு நீர் வீணாகும் நீர் அல்லது கசியக் கூடிய நீராக உள்ளது. இதைச் சரி செய்தாலே, மக்களுக்கான தண்ணீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும். 


இவற்றை விட முக்கியமான நீர் ஆதாரங்கள் மிகப்பெரிய நீர்த்தேக் கங்கள் தான். ஆனால், கடந்த 10 வருடங்களில் இங்கிலாந்தில் புதிய நீர்த்தேக் கங்கள் கட்டப்பட வில்லை. மேலும், தண்ணீரைக் கொண்டு செல்லும் குழாய் களிலிருந்தும் நீர் எடுக்கும் நீர் நிறுவனங் களில் இருந்து தண்ணீர் கசிவதும் இதற்குக் காரணமா கிறது. 

இவற்றை எல்லாம் சரி செய்யும் முயற்சியையும் அரசு மேற்கொள்ள வேண்டும். உலகம் முழுக்க நிலத்தடி நீர் குறைவதும் தண்ணீர்ப் பற்றாக்குறை நிகழ்வதும், சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது. இதற்கு, மோசமான செய ல்முறையும் தவறான கொள்கை முடிவுகளுமே காரணம் என்கின்றனர். 
தண்ணீர்ப் பற்றாக்குறை
மேலும், தண்ணீரைத் தக்க வைப்பதற் காகவும் காலநிலை மாற்றத்தை எதிர் கொள்வதற் காகவும் செயல் பாடுகளை மேற்கொள்ள வேண்டும். இல்லை யென்றால், 25 ஆண்டுகளில் இங்கிலாந்தும் டே ஜீரோவை எதிர் கொள்ள வேண்டி யிருக்கும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings