சர்க்கரை நோய் என்றால் என்ன?

0
அவசியம் ஒவ்வொருவரும் படிக்க வேண்டியது. இதை படிக்கும் போது வேறு எந்த வேளை இருந்தாலும் ஓரம் தள்ளி விட்டு முழுவதும் படித்து விட்டு வேரு வேலையை தொடருங்கள் ..)
சர்க்கரை நோய்
சர்க்கரை நோய் என்பது புதிதாக மனிதர் களுக்கு வந்திருக்கும் நோய் அல்ல. காலம் காலமாக உலகம் முழுக்கப் பரவலாக இருந்தது தான். ஆரம்பத்தில் இது, பணக்கார வியாதி யாகக் கருதப் பட்டது. 

இப்போது வாழ்க்கை முறை மாற்றம் காரணமாக நம் குடும்பத்தில், அக்கம் பக்கத்தில், நண்பர்கள், உறவினர்கள் எனப் பலருக்கும் இருப்பதைக் கண் கூடாகப் பார்க்க முடிகிறது.

கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவில் சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்டுள்ளவர் களின் எண்ணிக்கை மிகப் பெரிய அளவில் அதிகரித் துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் வாழ்க்கை முறை மாற்றம்.

சர்க்கரை நோயாளிகள் ஒரு பக்கம் இருக்க, தனக்கு சர்க்கரை நோய் இருப்பதே தெரியாமல் வாழ்பவர்களின் எண்ணிக்கை யும் இந்தியாவில் அதிகம். 

சர்க்கரை நோய் வந்தவர் களும் விழிப்பு உணர்வுடன் இருப்பதன் மூலம், சர்க்கரை நோயின் பாதிப்பைக் கட்டுக்குள் வைக்க முடியும். சர்க்கரை நோய் குறித்த முழு விவரங்களை உள்ளடக்கிய இந்த கைடு என்றென்றும் உதவும்.

சர்க்கரை நோய் என்றால் என்ன?

நாம் சாப்பிடும் உணவு, செரிமானத்தின் போது குளுக்கோஸாக மாற்றப் பட்டு ரத்தத்தில் கலக்கிறது. குளுக்கோஸ் தான் நமக்கு ஆற்றல் தரக்கூடியது. 

குளுக்கோஸை நம்முடைய செல்களால் நேரடியாகப் பயன்படுத்த முடியாது. இதற்கு உதவ, கணையம் (Pancreas) இன்சுலினை சுரக்கிறது.
ரத்தத்தில் கலக்கும் இன்சுலின், செல்கள் குளுக்கோஸைப் பயன்படுத்தச் செய்து, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. 

இன்சுலின் சரியாக சுரக்க வில்லை என்றாலோ, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப் படுத்தப் போது மானதாக இல்லை என்றாலோ, ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து விடும். இதைத் தான் சர்க்கரை நோய் என்கிறோம்.
சர்க்கரை நோய் வகைகள்



கர்ப்பகால சர்க்கரை நோய் (Gestational Diabetes)

இரண்டாம் நிலை சர்க்கரை நோய் (Secondary diabetes)

மோடி சர்க்கரை நோய் (Maturity onset diabetes of the young (MODY))
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings