டைப் 2 சர்க்கரை நோய் என்றால் என்ன?

இந்தியாவில் உள்ள சர்க்கரை நோயாளி களில் 95 சதவிகிதம் பேருக்கு டைப் 2 சர்க்கரை நோய் தான் உள்ளது. இவர்களுக்கு, கணையத்தில் இன்சுலின் சுரக்கும்.
டைப் 2 சர்க்கரை நோய்
ஆனால், அதன் செயல்திறன் குறைவாக இருக்கும் அல்லது போது மான அளவில் சுரக்காமல் இருக்கும்.

டைப் 2 சர்க்கரை நோய் பரம்பரையாக வருவதற்கான வாய்ப்பு அதிகம். மேலும், டைப் 2 சர்க்கரை நோய் வருவதற்கு நான்கு முக்கியமான காரணங்கள் உள்ளன...

1. உணவு

நம் தென்னிந்திய உணவு வகைகளில் 80 சதவிகிதம் கார்போ ஹைட்ரேட் என்கிற மாவுச்சத்து தான் இருக்கிறது. உடலுக்கு கார்போ ஹைட்ரேட் 50-60  சதவிகிதம் மட்டுமே தேவை.

அதிக அளவு கார்போஹைட்ரேட் உள்ள உணவை தினமும் சாப்பிடும் போது தான் பிரச்னையே உருவாகிறது. கார்போ ஹைட்ரேட் உடனடி யாகச் செரிமானம் ஆகி ரத்தத்தில் சர்க்கரை அளவை மிக விரைவில் அதிகரிக்கச் செய்து விடுகிறது.

சமச்சீரற்ற உணவை உட்கொள்வதே உடல் பருமனுக்கும் அதைத் தொடர்ந்து வரும் டைப் - 2 சர்க்கரை நோய்க்கும் முக்கியக் காரணம்.

2. உடல் உழைப்பு இன்மை

உடல் உழைப்பு இன்மை என்பது வேறு, உடற் பயிற்சி என்பது வேறு. கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் எங்கு சென்றாலும் ஓரளவுக்கு நடந்தே செல்வார்கள். வீட்டிலும் உடல் உழைப்பு இருந்தது.
அன்றாட உடல் உழைப்பு என்பதே சர்க்கரை நோயைத் தடுக்கப் போது மானதாக இருந்தது. ஆனால், உடல் உழைப்பு இன்மை தற்போது அதிகரித்ததன் விளைவாகவே உடற்பயிற்சி அறிவுறுத்தப் படுகிறது.

உடல் உழைப்பு இருக்கும்போது கலோரி அதிக அளவில் செலவிடப்படுகிறது. இதனால், இன்சுலின் தேவை குறையும். இதனால், சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு குறைகிறது.

உடற்பயிற்சி, நடைப் பயிற்சியைக் காட்டிலும், தினமும் ஒரு மணி நேரம் உடலில் இருந்து நன்றாக வியர்வை வெளியேறும் அளவுக்கு,

பேட்மின்ட்டன், டென்னிஸ், கால்பந்து, நீச்சல் என ஏதாவது ஒரு விளை யாட்டில் ஈடுபடுவது மிகவும் சிறந்தது. முடியாதவர்கள் குறைந்தது நடைப்பயிற்சி செய்தாலே போதுமானது.

இன்றைக்கு பல பள்ளி மாணவ மாணவிகள் விளையாடுவதே இல்லை. பள்ளிகளில், விளையாட்டு வகுப்புகள் பெயர் அளவுக்கே இருக்கின்றன.

இதனால், இளம் வயதில் உடல்பருமன் பிரச்னை ஏற்படுகிறது. அவர்களை விளையாட விடுவதன் மூலம், இதைத் தவிர்க்க முடியும்.
(nextPage)
3. ஆல்கஹால்
ஆல்கஹால்
ஆல்கஹால், நேரடி சர்க்கரை நோய் பாதிப்பை ஏற்படுத்துவது இல்லை என்றாலும், மறைமுகமாக மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத் துகிறது.

மது அருந்துபவர் களுக்குக் கல்லீரல் பாதிப்பதாலும், உடல் எடை அதிகரிக்கும் என்பதாலும் மறைமுகமாக சர்க்கரை நோய்க்கு வித்திடு கிறது.

4.சிகரெட்

சிகரெட்டில் ஏராளமான ரசாயனப் பொருட்கள் உள்ளன. ஒரு சிகரெட்டில் மட்டும் ஏறக்குறைய 80 வகையான கடுமையான நச்சுத் தன்மை கொண்ட பொருட்கள் உள்ளன.

இவை, ரத்த நாளங்கள், கணையம் போன்ற வற்றைப் பாதிக்கும் போது, சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம்.

சிகரெட் பிடிக்கும் பெரும் பாலானோருக்கு பின்னாட்களில் சர்க்கரை நோய் வருகிறது என்பது ஆய்வுகளில் உறுதியாகி உள்ளது.
Tags:
Privacy and cookie settings