மக்களவைத் தேர்தல் பணிகளில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடு பட்டுள்ளன. அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்துள்ளன. இந்தக் கூட்டணியில் பாஜகவுக்கு மிகக் குறைவாக 5 இடங்கள் மட்டுமே ஒதுக்கிய அதிமுக, பாமகவுக்கு அதைக் காட்டிலும் அதிகமாக 7 இடங்கள் ஒதுக்கியது.
இதனால், தமிழகத்தில் அதிமுக தலைமையில் கூட்டணி அமைந் துள்ளதாகப் பேசப்பட்டு வந்தது. இதனிடையே, தமிழகம் வந்த பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, தமிழகத்தில் அதிமுக தலைமையில் கூட்டணி ஏதும் இல்லை. பாஜக தலைமை யிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தான் அதிமுக இடம் பெற்றுள்ளது என
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திடம் அமித் ஷா கூறும் வீடியோ வைரலாக பரவியது. ஏற்கனவே ஜெயலலிதா மறைவிற்கு பின் பாஜக தான் அதிமுகவை வழி நடத்துகிறது என்று தமிழகம் முழுவதும் மக்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், விருதுநகரில் இன்று செய்தி யாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர, ஜெயலலிதா என்கிற அம்மா இல்லாத எங்களை தற்போது பிரதமர் நரேந்திர மோடி தான் டாடியாக இருந்து வழி நடத்துகிறார் என்றார்.
மேலும், இந்தியாவை மோடியே மீண்டும் ஆள வேண்டும். அதே போல், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி தொடர வேண்டும். ஜெயலலிதா எனும் ஆளுமை கொண்ட அம்மா இல்லாமல் நாங்கள் தவித்து வருகிற இந்த நேரத்தில், பிரதமர் மோடி தான் எங்களுக்கு டாடியாக இருந்து வழி காட்டுகிறார்.
அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் எல்லோரும் பாதுகாப்பாக உள்ளனர். அதே போல், பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்திய அளவில் எல்லோரும் பாதுகாப்புடன் இருக்கிறார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
Thanks for Your Comments