திருமணமாகி 2 ஆண்டுகள் கழித்து காதலனோடு பெண் ஓட்டம் !

0
திருமணம் முடித்து கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில், இளம்பெண், ஒருவர் கல்லூரி கால காதலனோடு, குடித்தனம் நடத்த சென்றுள்ளார்... இவர்களை தேடிப்பிடித்து அழைத்து வந்த போலீசார், அறிவுரை கூறி, சட்டப் படியான நடவடிக்கை களுக்கு வழி காட்டாமல், ஒரு சார்பாக நடந்து கொண்டுள்ள தாக, பெண்ணின் உறவினர்கள் குற்றம் சாட்டி யுள்ளனர்...
திருமணமாகி 2 ஆண்டுகள் கழித்து காதலனோடு பெண் ஓட்டம்


இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியை அடுத்த மங்கலேஸ்வரி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த பிரகாஷ். இவருக்கும் கீழக்கரையை அடுத்த சிலையப்பன் வலசை பகுதியை சேர்ந்த நாக நந்தினி என்ற பெண்ணுக்கும் கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. துபாயில் உள்ள தனியார் மீன்பிடி நிறுவனத்தில் வேலை கிடைத்ததால், ஆனந்த் பிரகாஷ் வெளிநாடு பயணமானார். 

கடந்தாண்டு, மனைவி நாகநந்தினியை, சுற்றுலா விசாவில் துபாய்க்கு அழைத்துச் சென்ற ஆனந்த் பிரகாஷ், இரண்டு மாதம் அங்கு இருந்து விட்டு, ஊருக்கு அழைத்து வந்துள்ளார். மீண்டும் பணி நிமித்தமாக, 6 மாதங்களுக்கு முன் துபாய் சென்ற ஆனந்த பிரகாஷ், மனைவி நாகநந்தினி, சுற்றுலா விசாவில் அங்கு வருவதற்கான ஏற்பாடு களை செய்துள்ளார்.

இதற்காக மனைவி நாக நந்தினிக்கு விமான டிக்கெட்டும் அனுப்பி வைத்துள்ளார் ஆனந்த பிரகாஷ். இந்த சூழலில், கடந்த சனிக்கிழமை யன்று, நாக நந்தினி, வீட்டிலிருந்து மாயமானார். பல இடங்களிலும் தேடியும் கிடைக்காத நிலையில், ஏர்வாடி காவல் நிலையத்தில், உறவினர்கள் புகார் அளித்தனர். 

இதை யடுத்து, ஏர்வாடி காவல் நிலைய போலீசார் நடத்திய விசாரணை யில் நாகநந்தினி மாயமானதற் கான காரணம் தெரிய வந்தது. திருமணத் திற்கு முன்பு, கல்லூரியில் படித்தபோது, சக மாணவரான சின்ன ஏர்வாடியை சேர்ந்த வெண்ணிலவன் என்பவரைக் காதலித் துள்ளார். 

இந்த விவகாரம், நாகநந்தினி யின் குடும்பத்தின ருக்கு தெரிய வரவே அவரது பெற்றோர், ஆனந்த பிரகாசுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். தனது காதலன் ஊரான சின்ன ஏர்வாடிக்கு அருகே உள்ள மங்கலேஸ்வரி நகருக்கே திருமணமாகி சென்ற நாகநந்தினி, காதலனுட னான நட்புறவை தொடர்ந் துள்ளார். 

நேரம் கிடைக்கும் போதெல்லாம் இருவரும் செல்போனி லும், வாட்ஸ் ஆப்பிலும் அளவளாவி யுள்ளனர். கடந்த 6 மாதங்களு க்கு முன்னர் ஆனந்த பிரகாஷ் வெளிநாடு சென்று விடவே, இருவருக்கும் இடையிலான பழக்கும் உச்சத்தை அடைந்திருக் கிறது. இந்தச் சூழலில், நாகநந்தினி-வெண்ணிலவன் ஜோடி, தத்தமது வீடுகளி லிருந்து வெளியேறி, தூத்துக்குடி க்குச் சென்று தங்கியுள்ளனர். 

அங்கு அவர்களை கண்டுபிடித்த ஏர்வாடி போலீசார், காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு வந்த ஆனந்த பிரகாஷ், நாக நந்தினி உறவினர்கள், இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.


வெறும் மேஜர் என்ற ஒற்றை காரணத்தை மட்டுமே வைத்துக் கொண்டு, காதலன் வெண்ணில வனோடு, அனுப்புவ திலேயே போலீசார் குறியாக இருந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டினர்.... இதற்கு நாகநந்தினி யின் உறவினர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால், இருதரப்பு க்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது...

இந்த களேபரங் களுக்கு மத்தியில், நாகநந்தினி, தனது காதலர் வெண்ணிலவனுடன் செல்வேன் என்பதில் உறுதியாக இருந்துள்ளார். இதை யடுத்து, பெற்றோர் மற்றும் உறவினர்களை சமாதானம் செய்த போலீசார், கல்லூரி கால காதலன் வெண்ணிலவ னுடன், நாகநந்தினியை, அனுப்பி வைத்தனர்.

திருமணத்திற்கு முன்பே தனது காதல் விவகாரத்தில் நாகநந்தினி உறுதியாக இருந்திருந் தால், இப்போது, திருமணம் முடித்து ஒருவரை ஏமாற்றிய தாக காவல் நிலையத்தில் நிற்க வேண்டிய நிலை வந்திருக்காது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings