இந்தியாவில் வனவிலங்குகள் வேட்டை யாடுவதற்குத் தடை விதிக்கப் பட்டிருக்கிறது. ஆனாலும், மலைப் பகுதிகளில் வேட்டை யாடப்படும் விலங்குகளின் எண்ணிக்கை இன்னும் குறைய வில்லை. இந்த வேட்டைக் காரர்கள் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அதிகமாகக் காணப் படுகிறார்கள்.
தற்போது, தந்தத்துக்காக யானையை வேட்டையாட முயற்சி செய்த வழக்கில் குற்றவாளி களுக்கு தண்டனை வழங்கி மேட்டுப் பாளையம் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கிட்டத்தட்ட 8 வருடப் போராட்டத்து க்கு பிறகு இவர்களைக் கைது செய்து இருக்கிறார்கள், காவல் துறையினர்.
கோவை வனக் கோட்டம், சிறுமுகை வனச்சரகத்தில் ஒடந்துறை காட்டுப் பகுதியில், தேனி மாவட்டம், வருச நாட்டைச் சேர்ந்த சென்ராயன், சிவா, குபேந்திரன், சிங்கம் ஆகியோர் 2011-ம் ஆண்டு தந்தத்துக் காக ஆண் யானையை வேட்டையாட முயன்றுள்ளனர்.
இது தொடர்பாக சிறுமுகை வனச்சரக அலுவலரால், வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர். இவர்கள் மீது தேனி, கோவை, நீலகிரி, சிறுமுகை, சிறுமலை, கேரளா போன்ற இடங்களில் வேட்டை யாடியதற்காக மேலும் பல வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன.
இதற்கு முன்னர் கைது செய்யும் நடவடிக்கை எடுக்கும் போது தப்பி விட்டனர். இவர்கள் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப் பட்டுள்ளதாக வன அலுவலர்கள் தெரிவிக் கின்றனர். இந்த 4 பேர் தவிர, இன்னும் சிலர் இந்த வழக்கில் தேடப்பட்டு வருகிறார்கள்.
மேற்கண்ட வழக்கில் கடந்த மார்ச் 12-ம் தேதி மேட்டுப் பாளையம் குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம் சாற்றப்பட்ட குற்றவாளி களுக்குக் காட்டு யானையை வேட்டையாட முயன்ற குற்றத்துக்கு ஒவ்வொரு வருக்கும் தலா 10,500 ரூபாய் அபராதமும் மூன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பு அளிக்கப் பட்டிருக்கிறது.
இது போன்ற குற்றங்களு க்கு அதிகபட்ச தண்டனை கொடுக்க வேண்டும், வனவிலங்கு பாதுகாப்பு சட்டமும் கடுமை யாக்கப்பட வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை எழுப்புகின்றனர்.
Thanks for Your Comments