அது என்ன சிவகார்த்திகேயனுக்கு ஒரு நியாயம்? எனக்கு ஒரு நியாயமா? ஏன்? நான் சாதாரண பொண்ணு என்பதால் எனக்கு ஓட்டு போட உரிமை அனுமதி இல்லையா?
என்று வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத தேன்மொழி என்பவர் தர்ணாவில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்று காலை நடிகர் சிவகார்த்திகேயன் வளசர வாக்கத்தில் உள்ள பள்ளியில் ஓட்டு போட போனார். அப்போது, அவரது மனைவிக்கு மட்டும் தான் ஓட்டு இருந்ததே தவிர, சிவகார்த்திகேயன் பெயர் அந்த லிஸ்ட்டில் இல்லை.
இதனால் ஓட்டு போடாமல் திரும்பி சென்று விட்டார். இதனால் அவரது மனைவியும் வாக்கு சீட்டு இருந்தும் ஓட்டு போடாமல் திரும்பி சென்றார்.
கொஞ்ச நேரத்தில் சிவகார்த்தியனும் அவரது மனைவியும் திரும்பவும் பூத்துக்கு வந்து அதிகாரி களுடன் வாக்குவாதம் செய்தனர்.
சிவகார்த்திகேயன்
இந்த விஷயம், மேலதிகாரிக்கு சென்றது. பிறகு சம்பந்தப்பட்ட பூத்தில் இருந்து அரசியல் கட்சி அளவில் சென்றது. இதன் பிறகு தம்பதியை சமாதானப் படுத்தும் முயற்சி நடந்தது.
கடைசியாக சிவகார்த்திகேய னுக்கு சேலஞ்ச் ஓட்டு போட அனுமதி தரப்பட்டதை அடுத்து அவர் ஓட்டு போட்டு விட்டு சென்றார்.
அறந்தாங்கி
இதே போலவே அறந்தாங்கி அருகே எருக்கல கோட்டை வாக்குச் சாவடியில் தேன்மொழி என்பவருக்கும் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த தேன்மொழி திகைத்து நிற்கவும், அவரை ஓட்டு போட அதிகாரிகள் அனுமதிக்க வில்லை.
எவ்வளவோ சொல்லி பார்த்தும் அதிகாரிகள் கேட்காததால், அவர்களிடம் தேன்மொழி வாக்குவாதம் செய்ய ஆரம்பித்து விட்டார். அப்போதும் அதிகாரிகள் அவரை ஓட்டு போட மறுத்து விட்டனர்.
நியாயமா
இதனால் இன்னும் கொதிப்படைந்த தேன்மொழி, நடிகர் சிவகார்த்திகேயனை மட்டும் ஏன் அனுமதிச்சீங்க? எப்படி அனுமதிச்சீங்க? நடிகருக்கு ஒரு நியாயம்.. எனக்கு ஒரு நியாயமா?
சிவகார்த்திகேயனுக்கு அனுமதி அளித்தது போல் எனக்கும் அனுமதி தாங்க. இல்லேன்னா, சிவகார்த்திகே யனுக்கு லிஸ்ட்டில் பெயர் இல்லாத பூத்தில் ஓட்டு போட அதிகாரிகள் அனுமதித்தது குற்றம்னு சொல்லுங்க.
தர்ணா
அவர் பிரபலமானவர், அதனால வாய்ப்பு.. நான் சாமானிய பெண்.. அதனால ஓட்டு போட மறுப்பா? என்று வாக்குவாதம் செய்தார்.
இதற்கும் அதிகாரிகள் எந்த பதிலும் சொல்லாததால், அங்கேயே பூத்தின் வாசலிலேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்து விட்டார்.
பேச்சு வார்த்தை
அறந்தாங்கியில் தேன்மொழி என்ற பெண் தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்து தர்ணாவிலும் ஈடுபட்டு வருகிறார் என்ற செய்தி பெரும் தீயாக பரவியது.
தகவலறிந்து பின்னர் அங்கு வந்த அறந்தாங்கி காவல் துணை காணிப்பாளர் தேன்மொழியுடன் பேச்சு வார்த்தை நடத்தி அப்பெண்ணிடம் விளக்கமாக கூறிய பிறகு தான் தர்ணாவை தேன்மொழி கை விட்டார்.
சொந்த ஊர்
கொடைக்கானலில் கணவர் வேலை பார்க்க, தேன்மொழியும் அங்கு தான் தங்கி உள்ளார். ஓட்டு போடுவதற் காகவே அங்கிருந்து கிளம்பி சொந்த ஊருக்கு வந்திருக்கிறார் என சொல்லப் படுகிறது.
Thanks for Your Comments