மோடிக்கு எதிராக எல்லை பாதுகாப்பு படை வீரர் போட்டி !

0
2019 நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில், உத்தர பிரதேசத்தில் உள்ள வாரணாசி மக்களவை தொகுதிக்கு பா.ஜ.க. சார்பில் பிரதமர் மோடி போட்டி யிடுகிறார். வருகிற மே 19ந்தேதி நடைபெறும் 7வது கட்ட தேர்தலில் இந்த தொகுதிக்கான வாக்கு பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு இறுதி நாள் இன்று ஆகும்.
மோடிக்கு எதிராக எல்லை பாதுகாப்பு படை வீரர் போட்டி


இந்த நிலையில், இந்த தொகுதியில் தேஜ் பகதூர் யாதவ் என்பவரை சமாஜ்வாடி கட்சி களமிறக்கி உள்ளது. இவர் எல்லை பாதுகாப்பு படை வீரராக பணிபுரிந்தவர். வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்து அவர் புகார் எழுப்பினார். 

தரமற்ற முறையில் உணவு பரிமாறப் படுவதால் இரவில் பட்டினியுடன் படுக்கைக்கு செல்ல நேரிடுகிறது என்ற குற்றச் சாட்டுடன் சமூக வலை தளத்தில் அவர் வெளியிட்ட வீடியோ பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த புகார் குறித்து உயர் நிலை விசாரணைக்கு உத்தர விடப்பட்டிருந்தது. நாட்டை காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுக்கு தரமான உணவு வழங்கப் படவில்லை என்ற புகார் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி யிருந்தது. 


இந்நிலையில் அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டார். ஆதாரமற்ற புகார்களை கூறி களங்கம் ஏற்படுத்தி யதால் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என எல்லை பாதுகாப்பு படை வட்டார தகவல் தெரிவித்தது. இதன்பின், ஹரியானாவின் ரேவரியில் செய்தியாளர்களிடம் பேசிய தேஜ் பகதூர் யாதவ், வாரணாசி தொகுதியில், பிரதமர் மோடியை எதிர்த்து சுயேட்சை வேட்பாளராக போட்டியிட முடிவு செய்துள்ளேன். 

ஊழல் பிரச்சினையை நான் எழுப்பிய தால், என்னை பணி நீக்கம் செய்தார்கள். எனது முதல் நோக்கம் என்ன வெனில், பாதுகாப்பு படை துறையில் உள்ள ஊழலை ஒழிப்பதுதான் என்றார். இந்த நிலையில், அவரை பிரதமர் மோடிக்கு எதிராக வாரணாசி தொகுதி யின் வேட்பாளராக சமாஜ்வாடி கட்சி நிறுத்தி உள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings