இலங்கை தலைநகர் கொழும்புவில் ஈஸ்டர் ஞாயிறன்று நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்புகளில் 253 பேர் கொல்லப் பட்டனர். அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் நடத்தப்பட்டு வரும் தேடுதல் வேட்டையில் ஏராளமான வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டு வருவதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இதனிடையே இலங்கை அதிபர் மாளிகை விடுத்துள்ள செய்திக் குறிப்பில், மக்களின் அடையாள த்தை உறுதிப் படுத்துவதற்கு தடையாக அமையும் வகையில் முகத்தை மறைப்பதற்கு இன்று முதல் தடை விதிக்கப் படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள அனைத்து முகத்திரை களையும் பயன் படுத்துவதற்கு தடை விதிக்கப் படுவதாக அதில் குறிப்பிடப் பட்டுள்ளது. எந்தவொரு சமூகப் பிரிவையும் அசவுகரியத்திற் குள்ளாக்காத வகையில் நல்லிணக் கத்தை உருவாக்கு வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப் படுவதாகவும் அதிபர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் அரங்கேற்றப் பட்டு ஒருவாரம் கடந்த நிலையில், இன்னும் இயல்பு நிலை திரும்பாததால் மக்கள் வீடுகளுக் குள்ளே முடங்கி யுள்ளனர். இதனிடையே கேரளாவில் தேசிய புலனாய்வு முகமையினர் சந்தேகத்துக் குரிய 3 பேரின் வீடுகளில் சோதனை நடத்திய துடன், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
2016 ஆம் ஆண்டு கேரளாவைச் சேர்ந்த சிலர் ஐஎஸ் அமைப்பில் சிலர் சேர்ந்ததாக எழுந்த புகார் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமையினர் விசாரித்து வருகின்றனர். இதுதொடர்பாக கேரளாவின் காசர்கோடு மற்றும் பாலக்காடு பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில் ஐஎஸ் அமைப்போடு தொடர் புடையதான சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை பிடித்து அவர்கள் விசாரித்து வருகின்றனர்.
மூவரில் இருவர் காசர்கோடு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், ஒருவர் பாலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது. கைது செய்யப் பட்டவர்களிடம் இலங்கை குண்டு வெடிப்பு தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் என தகவல்கள் வெளியாகி யுள்ளது.
Thanks for Your Comments