வெள்ளை வேட்டி - வெள்ளை சட்டை, விபூதி சகிதம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சேலம் சிலுவம் பாளையத்தில் வாக்களித்தார். எடப்பாடி பழனிச்சாமிக்கு இது மிக முக்கியமான தேர்தல். 2 வருடம் முடிந்ததை விட வரப்போகும் 3 வருடம் எப்படி இருக்க போகிறது என்பதை நிர்ணயிக்க கூடிய தேர்தல்.
அதுவும் சொந்த தொகுதியில் தன் கட்சி வேட்பாளரை நிறுத்தி உள்ளார். அவரது வெற்றியில் தான் எடப்பாடி பழனிசாமியின் கவுரமே அடங்கி உள்ளது. இதற்காகத் தான் சென்ட்டிமென்ட்டாக கடைசி தேர்தலை சேலத்தில் வந்து முடித்தார். இதற்காக வீதி வீதியாக நடையாய் நடந்து வாக்கு சேகரித்தார்.
சிலுவம் பாளையம்
அவரது சொந்த ஊர் சேலம் மாவட்டம் சிலுவம் பாளையம் ஆகும். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தான் இன்று காலை 8 மணிக்கு முதல்வர் வாக்களிக்க வருவார் என்று ஏற்கனவே தெரிவிக்கப் பட்டது.
அவரது சொந்த ஊர் சேலம் மாவட்டம் சிலுவம் பாளையம் ஆகும். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தான் இன்று காலை 8 மணிக்கு முதல்வர் வாக்களிக்க வருவார் என்று ஏற்கனவே தெரிவிக்கப் பட்டது.
பளிச் புன்னகை
அதன்படி சரியாக 8 மணிக்கு வெள்ளை -சேட்டி, விபூதி என வழக்கமான பளிச்சுடன் வந்தார் முதல்வர். கையில் வெள்ளை கலர் கர்சீப் வைத்திருந்தார். வீட்டுக்கு பக்கத்திலேயே தான் இந்த வாக்கு சாவடி உள்ளது. அதனால் நடந்தே வந்தார் முதல்வர்.
வரிசை
அப்போது ஏராளமான போலீசார் முதல்வரின் பாதுகாப்பு பின் நின்றிருந் தாலும்,அந்த ஊர் மக்கள் ஏராளமானோர் நடந்து போய் கொண்டிருந்தனர். சாவடிக்கு வந்த முதல்வர், கியூவில் போய் நின்று கொண்டார். அங்கு மக்களோடு மக்களாக இணைந்து தன் வாக்கினை செலுத்தி விட்டு சென்றார்.
வரலாறு
தமிழகத்தில் ஒரு முதல்வர் இப்படி சர்வ சாதாரணமாக ஒரு கிராமத்து வாக்குச் சாவடியில் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களித் ததைப் பார்த்து பல காலமாகி விட்டது என்பதால் எடப்பாடி பழனிச்சாமி வரிசையில் நின்று வாக்களித்தது வரலாற்றிலும் இடம் பிடித்து விட்டது.
Thanks for Your Comments