இயற்கை தொடர்பான புகைப் படங்களுக்கு வேர்ல்டு பிரஸ் போட்டோ அமைப்பு ஆண்டுதோறும் பரிசுகளை வழங்குகிறது. இந்த ஆண்டு, முதல் மூன்று பரிசுகளை வென்ற புகைப்படங்கள் இங்கே...
* இந்தோனேஷியா வின் போர்னி யோதீவில் உள்ள குனுங் பலுங் தேசிய பூங்காவில் ஒரு உராங் உடான் குரங்கு பகீரதப் பிரயத்தனம் செய்து 30 மீட்டர் உயர மரத்தில் ஏறும் இந்தப் படம், முதல் பரிசை வென்றிருக்கிறது.
* விலங்குகளே ஏதுமில்லாத இந்தப் படம்தான் இரண்டாவது பரிசைப் பெற்றது. ஆப்ரிக்காவின் டோகா நாட்டில் கடலுக்குள் இருக்கும் துறைமுகம் வழியே யானைத் தந்தங்களைக் கடத்துகிறார்கள். உயிரைப் பணயம் வைத்து கஸ்டம்ஸ் அதிகாரிகள் அந்தக் கடத்தல் காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறார்கள். பிடிபட்ட ஒரு கன்டெயினர் இது!
* மடகாஸ்கர் தீவில் வசிக்கும் ஃபர்சிஃபெர் அம்ப்ரென்சிஸ் என்ற பச்சோந்தி இனத்துக்கு ஒரு விசேஷ குணம் உண்டு. தன் இரை தூரத்தில் இருந்தாலும் அநாயாசமாக நாக்கை நீட்டி அதைப் பிடித்து விடும். அந்த வேட்டைக் காட்சி மூன்றாம் பரிசைப் பெற்றிருக்கிறது.
Thanks for Your Comments