ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த அரசு நடத்துனர் !

0
உடலில் காயம்பட்டு செயல்பட முடியாத சூழலில் ஆம்புலன்ஸில் வந்து தனது வாக்கை அரசு போக்குவரத்து கழக நடத்துனர் வாக்குப்பதிவு செய்துள்ளார். தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்தவர் முபாரக் அலி. இவர் அரசு போக்குவரத்து கழக நடத்துனராக பணியாற்றி வருகிறார். 
ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த அரசு நடத்துனர்


கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சாலையில் நடந்து சென்று கொண்டி ருந்தார். அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியதில் இவருடைய கால் முறிந்தது. இதனை யடுத்து சிகிச்சைக் காக தேனியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்று அவருடைய கால் முறிவிற்காக அறுவை சிகிச்சை செய்யப் பட்டது. இந்நிலையில் இன்று நடைபெற்ற வாக்குப் பதிவில் தனது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என முடிவு செய்துள்ளார்.

இதையடுத்து தேனி தனியார் மருத்துவ மனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் பெரிய குளத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்றார். அங்கு தனது வாக்கை பதிவு செய்தார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings