சேலத்தில் பழக்கடை பெண்ணுக்கு முதல்வர் பழனிச்சாமி பணம் கொடுத்த விவகாரம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து தற்போது அந்த பழக்கடை பெண்ணே விளக்கம் அளித்துள்ளார். சேலத்தில் நேற்று முதல்வர் பழனிச்சாமி இறுதிக்கட்ட பிரச்சாரத்தை செய்து வந்தார்.
அப்போது அங்கு அவர் பழக்கடை வியாபாரி பெண் ஒருவருக்கு கையில் பணம் வைத்து கொடுத்தார்.
முதல்வர் இப்படி வாக்காளருக்கு பணம் கொடுத்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பலர் கேள்வி எழுப்பினார்கள்.
வைரல் வீடியோ
மிக முக்கியமான இது தொடர்பான வீடியோ ஒன்றும் இணையத்தில் வெளியானது. முதல்வர் பணம் கொடுப்பது இதில் அப்படியே பதிவாகி இருந்தது.
இது தொடர்பாக நேற்று மாலையே தமிழக முதல்வர் பழனிச்சாமி விளக்கம் அளித்தார்.
என்ன விளக்கம்
முதல்வர் அளித்த விளக்கத்தில், நான் சேலத்தில் நடந்து கடைகளில் வாக்கு கேட்டுக் கொண்டு இருந்தேன். அப்போது ஒரு பழக்கடையில் வாக்கு கேட்டேன்.
அவர் எனக்கு ஒரு சீப்பு பழம் கொடுத்தார். அவர் எனக்கு பழம் கொடுத்த காரணத்தால் அதற்கு உரிய பணத்தை கொடுத்தேன்.
பழம் காசு
ஆனால் நான் பழம் வாங்கியதை யாரும் காட்ட வில்லை. நான் காசு கொடுத்ததை மட்டும் வீடியோ போட்டு காட்டி இருக்கிறார்கள்.
எனக்கு எதுவாக இருந்தாலும் காசு கொடுத்து வாங்குவது தான் வழக்கம். அதனால் தான் பணம் கொடுத்தேன். தவறாக என்னை சித்தரிக் கிறார்கள்.
கிண்டல்
நான் என்ன திமுகவா? பிரியாணி சாப்பிட்டு விட்டு காசு கொடுக்காமல் போக. ஓசியில் சாப்பிட நாங்கள் என்ன திமுகவினரா? காசு கேட்டால் அவர்கள் தான் அடிப்பார்கள்.
அவதூறான செய்தியை திமுகவினர் பரப்புகிறார்கள் என்று முதல்வர் குறிப்பிட்டு இருந்தார். ஆனாலும் திமுகவினர் தொடர்ந்து விடாமல் இது குறித்து பேசி வந்தனர்.
வீடியோ மோசம்
முக்கியமாக முதல்வர் பணம் கொடுக்கும் வீடியோவை தொடர்ந்து இணையத்தில் பகிர்ந்து வந்தனர். இது அதிமுக கூட்டணியினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த கடைக்கார பெண்ணுக்கு முதல்வர் ஆயிரங்களில் கொடுத்தார். பழம் வாங்கியதற்கு மட்டும் ரூபாய் ஒன்றும் கொடுக்க வில்லை என்று இணையத்தில் தகவல்கள் வந்தது.
புதிய விளக்கம்
இந்த நிலையில் தற்போது அந்த கடைக்கார பெண்ணே இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், என்னிடம் முதல்வர் பணம் கொடுத்தது உண்மை தான்.
ஆனால் அவர் 2000 ரூபாய் எல்லாம் கொடுக்க வில்லை. அவர் கொடுத்து வெறும் 50 ரூபாய்தான். அவர் கொடுத்த பணத்தை கூட வைத்து இருக்கிறேன். நீங்களே பாருங்கள் என்று பேட்டி அளித்து இருக்கிறார்.
இணையம் வைரல்
இதனால் தற்போது முதல்வர் பணம் கொடுத்தது தொடர்பான சர்ச்சைகள் கொஞ்சம் முடிவிற்கு வந்து இருக்கிறது.
இந்த வீடியோ நேற்று இணையம் முழுக்க வைரலானது. தமிழக முதல்வரே பணம் கொடுப்பதா என்று பலர் கேள்வி எழுப்பியதும் குறிப்பிடத்தக்கது.
Tags:
Thanks for Your Comments