நெஞ்சு பாரம், தோள் பட்டை வலி, அதிக அளவு வியர்வை வெளியேறுதல், கீழ்த்தாடை முதல் தொப்புள் வரை ஏதாவது ஒரு சில இடங்களில் ஏற்படும் வலி (உதாரணம், தொண்டை வலி) ஆகியவை இதன் அறிகுறிகள். 15 நிமிடங் களுக்கு மேல் நெஞ்சுப் பகுதியில் வலி நீடித்தால் கட்டாயம் மருத்துவ உதவியைப் பெற வேண்டும்.
மாரடைப்பு ஏற்பட்டவர் களுக்கு ஓரளவு சுயநினைவு இருக்கும். `நெஞ்சு வலிக்கிறது’ என சைகையிலோ, வார்த்தை களிலோ சொல்ல முயல்வார்கள். முதலில் அவர்களைக் காற்றோட்ட மான இடத்தில் அமரவைக்க வேண்டும்.
தண்ணீர், சோடா, பழச்சாறு போன்ற வற்றைத் தர வேண்டாம். இதனால், புரையேறி திடீர் இதயத் துடிப்பு முடக்கம் ஏற்படக் கூடும்.ஆஸ்பிரின் 325 மி.கி மாத்திரை ஒன்றை உடனடியாகத் தர வேண்டும். இது ரத்தம் உறைதலைத் தடுக்கும். இதைக் கடித்து மென்று அல்லது சிறிதளவு தண்ணீரில் விழுங்கச் செய்யலாம்.
ஒருவேளை மாரடைப்பு ஏற்பட்டவர் சுய நினைவை இழந்து விட்டால், இதயத் துடிப்பு நின்று விட்டால் அவருக்கு சி.பி.ஆர் முதலுதவி அளிக்கலாம். இதயத் துடிப்பு மீண்டும் வந்ததும், உடனடியாக மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
Thanks for Your Comments