அனில் அம்பானியின் வரியை தள்ளுபடி செய்த பிரான்ஸ் !

0
பிரான்ஸ் நாட்டில் ரிலையன்ஸ் அட்லாண்டிக் பிளாக் பிரான்ஸ் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை அனில் அம்பானி நடத்தி வருகிறார். 2007ம் ஆண்டில் இருந்து 2012ம் ஆண்டு வரை 141 மில்லியன் யூரோ பணம் வரியாக செலுத்த பிரான்ஸ் அரசு உத்தர விட்டது. 
அம்பானியின் வரியை தள்ளுபடி செய்த பிரான்ஸ்


ஆனால், 7.6 மில்லியன் யூரோ மட்டுமே வரியாக தர முடியும் என்று அனில் அம்பானி தெரிவித்தார். இந்நிலையில், பிரான்சில் இயங்கிவரும் அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.1,100 கோடி வரியை அந்நாட்டு அரசு தள்ளுபடி செய்துள்ளது என அந்நாட்டு பத்திரிகை லி மாண்ட் செய்தி வெளியிட் டுள்ளது.

இதுகுறித்து அந்த பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், நரேந்திர மோடி பிரதமர் ஆனவுடன் பிரான்சில் இருந்து ரஃபேல் போர் விமானங் களை வாங்க ஒப்புதல் ஆனது. ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தை அடுத்து அனில் அம்பானிக்கு ரூ.1,100 கோடி வரியை பிரான்ஸ் அரசு தள்ளுபடி செய்துள்ள தாக குறிப்பிட் டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings