சில மணி நேரங்கள் முன்பே எச்சரித்த இந்திய உளவுத்துறை !

0
இலங்கையில் குண்டு வெடிப்புகள் நிகழப்போவது குறித்து, சில மணி நேரங்கள் முன்பாக கூட இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததாக தகவல்கள் வெளியாகி யுள்ளன. இலங்கையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல் களை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 321 பேர் கொல்லப் பட்டனர். 500க்கும் மேற்பட்டோர் காயமடைந் துள்ளனர். 
எச்சரித்த இந்திய உளவுத்துறை
இந்த நிலையில், தாக்குதல் தொடர்பாக இந்திய உளவுத்துறை முன்கூட்டியே எச்சரித்த தகவல் தற்போது வெளியாகி யுள்ளது. இது குறித்து இலங்கை உளவுத்துறை வட்டாரங்கள் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த தகவல்படி, இந்திய உளவுத்துறை, சனிக்கிழமை இரவே, இலங்கையில் நடைபெற்ற திட்டமிட்ட தாக்குதல் தொடர்பான தகவலை அளித்ததாக கூறப்படுகிறது. 


மற்றொரு உளவுத்துறை அதிகாரி கூறுகையில், தேவாலயங் களை குறிவைத்து இலங்கையில் தாக்குதல்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது என்பது தொடர்பாக எங்களுக்கு இந்திய உளவுத்துறை தகவல் அளித்தது. முதல் தாக்குதல் நடைபெறு வதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பாக கூட, இந்த தகவல் எங்களுடன் பகிர்ந்து கொள்ளப் பட்டது. இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

இலங்கையில் நடைபெற்ற தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் பொறுப் பேற்றுள்ளது. இலங்கையை சேர்ந்த தேசிய ஜவ்ஹீத் ஜமாஅத் தீவிரவாத அமைப்பை சேர்ந்த 7 பேர் தற்கொலைப் படையினராக செயல் பட்டதாக தெரிய வந்துள்ளது. 

நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் மசூதிகளு க்குள் புகுந்து கிறிஸ்தவ வலதுசாரி தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலுக்கு பதிலடியாக இலங்கையில் தாக்குதல் நடத்தப் பட்டதாக இலங்கை அரசு நாடாளு மன்றத்தில் அறிவித்தது குறிப்பிடத் தக்கது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings