8 மெட்ரோ ரயில் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப் பட்டதை கண்டித்து போராட்டம் நடத்தி வரும் ஊழியர்களுடன் நாளை சென்னையில் முத்தரப்பு பேச்சு வார்த்தை நடக்க உள்ளது. விதிகளை மீறி மெட்ரோ ரயில் பணியாளர் சங்கம் உருவாக்கி யதற்காக, 8 ஊழியர்களை பணி நீக்கம் செய்து சென்னை மெட்ரோ நிர்வாகம் உத்தர விட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மெட்ரோ ரயில் ஊழியர்கள் 300-க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பு போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர். அவர்கள் தங்களை அதிக நேரம் பணி செய்ய கட்டாயப் படுத்துவதாக ஊழியர்கள் குற்றம் சாட்டினர். இதனிடையே திங்கள் கிழமை மாலை 6 மணிக்கு மேல் ஆங்காங்கே ரயில்களை நிறுத்தி விட்டு மெட்ரோ ஊழியர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
இதனால் மெட்ரோ ரயில் சேவை சென்னையில் பாதிக்கப் பட்டது. இதை யடுத்து தற்காலிக ஊழீயர்களை கொண்டு மெட்ரோ ரயில் சேவையை தங்கு தடையின்றி இயக்கி வருவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. செவ்வாய் கிழமை காலை, தொழிலாளர் நல ஆணையம், மெட்ரோ நிர்வாகம், ஊழியர்கள் ஆகியோர் அடங்கிய முத்தரப்பு பேச்சு வார்த்தை நடக்க உள்ளது.
இந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் வேலை நிறுத்தம் வாபஸ் ஆகும் என எதிர் பார்க்கப் படுகிறது. இதனிடையே 8 பேர் பணி நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் நிரந்தர ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித் துள்ளனர்.. அடுத்த அறிவிப்பு வரும் வரை வேலை நிறுத்தம் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித் துள்ளனர்.
Thanks for Your Comments