கர்நாடகாவின் மாண்ட்யா தொகுதியில் மங்களா நவீன் குமார் என்ற தாலுக் பஞ்சாயத்து உறுப்பினர் வாக்களித்த பின்னர் பெண் குழந்தை பெற்றார். நிறை மாத கார்ப்பமாக இருந்த அவர் காலை 7.30 மணிக்கு வாக்களித்தார். சுமார் 80 கோடி வாக்காளர் களும், 2000 -க்கும் அதிகமான அரசியல் கட்சிகளும் பங்கேற்கும் தேர்தலை நடத்தி முடிப்பது அவ்வளவு ஒன்றும் சுலபமான காரியம் இல்லை.
பிரமாண்டமான முறையில் நடக்கும் வாக்கு எண்ணிக்கை நேர்மையாக நடப்பதே இந்தத் தேர்தலின் நம்பகத் தன்மையை உறுதி செய்யும். அரசியல் கட்சிகளை ஆதரிக்கும் கும்பல்களைச் சேர்ந்தவர்கள் வாக்குச் சாவடிகளை கைப்பற்றுவதை இந்தியாவில் பல பத்தாண்டுகள் பார்த்துள்ளோம்.
வாக்குப்பதிவு இயந்திரங் களுக்கு மாறியபின் இவை அனைத்தும் மாறின. எனினும், அவற்றின் நம்பகத் தன்மை குறித்த கேள்விகள் அவ்வப்போது எழுகின்றன. இந்த இயந்திரங்களில் முறைகேடு நடந்துள்ள தாக தோற்கும் கட்சிகள் கூறி வருகின்றன.
பாரதிய ஜனதா கட்சி தேர்தலில் வென்று நரேந்திர மோதி பிரதமராகப் பதவியேற்ற 2014 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது வாக்குப்பதிவு இயந்திரங் களில் ஊடுருவல் நிகழ்ந்ததாக அமெரிக்க தொழில்நுட்ப வல்லுநர் ஒருவரின் கூற்றை இந்தியத் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.
இதுவரை குறைந்தது ஏழு முறை வாக்குப்பதிவு இயந்திரங் களில் முறைகேடு செய்யப் படுவதாக இந்திய நீதி மன்றங்களில் வழக்குத் தொடுக்கப் பட்டுள்ளது. எல்லா சமயங்களிலும் அரசுத் தரப்பு அதைக் கடுமையாக மறுத்துள்ளது.
இந்தியாவிலில் 16 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளன. ஒரு இயந்திரத்தில் 64 வேட்பாளர்களின் பெயர்களைச் சேர்க்க முடியும். அதிகபட்சமாக ஒரு இயந்திரத்தில் 2,000 வாக்குகள் பதிவு செய்ய முடியும்.
இந்த இயந்திரங்கள் மின்சாரம் இல்லாமல் பேட்டரியில் இயங்க முடியும். பொதுத்துறை நிறுவனங்க ளால் தயாரிக்கப்படும் மென்பொருட்கள் மூலம் இயங்கும் இவற்றின் கட்டுப்பாடு தங்கள் குழுவுக்கு வெளியே செல்லாது என்கின்றனர் அதிகாரிகள்.
வயதான மூதாட்டிகள் முதல் கர்ப்பிணிப் பெண்கள் வரை வாக்களித்து வருகின்றனர். வாக்கு இயந்திர முறைகேட்டால் இவர்கள் உழைப்பு வீணாகக் கூடாது என கருதப் படுகிறது. இந்நிலையில் கர்நாடகாவின் மாண்ட்யா தொகுதியில் மங்களா நவீன் குமார் என்ற தாலுக் பஞ்சாயத்து உறுப்பினர் வாக்களித்த பின்னர் பெண் குழந்தை பெற்றார்.
நிறை மாத கார்ப்பமாக இருந்த அவர் காலை 7.30 மணிக்கு வாக்களித்தார். கணவருடம் வாக்களித்து விட்டு திரும்புகை யில் அவருக்கு பிரசவ வலி உண்டாக, உடனே மருத்துவ மனையில் அனுமதிகப் பட்டார்.
Thanks for Your Comments