ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் கைதியாக வேலூர் சிறையில் 27 ஆண்டுக ளாக தண்டனை அனுபவித்து வரும் நளினி, லண்டனில் இருக்கும் தனது மகள் ஹரிதாவின் திருமண ஏற்பாடு களை கவனிக்க 6 மாதங்கள் பரோல் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் திருந்தார்.
மேலும், இந்த மனு மீதான விசாரணை க்கு தானே நேரில் ஆஜராகி வாதிட அனுமதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரி யுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்திய நாரயணன் மற்றும் நிர்மல்குமார் அடங்கிய அமர்வு, நேரில் ஆஜராகி வாதிட அனுமதிக் கோரிய மனுவுக்கு ஜூன் -11ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தர விட்டது.
தொடர்ந்து, அவசரமாக பரோல் தேவைப் பட்டால் விடுமுறை கால நீதி மன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். வழக்கின் அடுத்த விசாரணையை ஜூன் 11-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
Thanks for Your Comments