இன்று நாடு முழுவதும் நடைபெறும் 2-ம் கட்ட தேர்தலில் உத்திரப் பிரதேச மாநிலத்தில் ஆக்ரா, அலிகர், அம்ரோகா, புலந்தஷர், பதேபூர் சிக்ரி, ஹத்ராஸ், மதுரா மற்றும் நஜினா ஆகிய 8 தொகுதி களுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கடந்த முறை இந்த 8 தொகுதி களிலும் பாஜக வெற்றி பெற்றது.
ஆனால் இம்முறை அங்கு சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டி யிடுவதால் பாஜகவுக்கு கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் இன்றைய வாக்குப்பதிவில் அம்மாநிலத்தில் உள்ள பதேபூர் சிக்ரி தொகுதியில் ஒரு வாக்குக்கூட பதிவாக வில்லை என்ற தகவல் வெளியாகி யுள்ளது.
விவசாயிகள் அதிகம் வசிக்கும் அத்தொகுதியில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. நீர்பாசனம் மற்றும் குடிநீர் பயன்பாடு ஆகிய வற்றுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் தேர்தலை புறக்கணிப்ப தாக அத்தொகுதி மக்கள் தெரிவித்தனர்.
எனவே வாக்குப்பதிவு நாளான இன்று அங்கு 1 வாக்கு கூட இதுவரை பதிவாக வில்லை. வாக்குச்சாவடி தேர்தல் அலுவலரும் இத்தகவலை உறுதி செய்துள்ளார்.
Thanks for Your Comments