முதல் முறையாக வாக்களிக்கும் முதியவருக்கு மாவட்ட ஆட்சியா் வரவேற்பு !

0
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொத்தடிமை யாக இருந்து மீட்கப்பட்ட 85 வயது முதியவா் இன்று முதல் முறையாக வாக்களிக்க வந்த நிலையில் மாவட்ட ஆட்சியா் கந்தசாமி தடல்புடலாக வரவேற்றாா். 
முதியவருக்கு மாவட்ட ஆட்சியா் வரவேற்பு
முதல் முறையாக வாக்களிக்கும் முதியவ
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொத்தடிமை யாக இருந்து மீட்கப்பட்ட குடும்ப உறுப்பினா்கள் இன்று முதல் முறையாக வாக்களிக்க வந்தனர்.

அவா்களை அம்மாவட்ட ஆட்சியா் கந்தசாமி காரில் அழைத்து வந்து உற்சாகப் படுத்தினாா். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதியைச் சோ்ந்தவா் கன்னியப்பன். இவா் சிறுவயது முதலே கொத்தடிமை யாக இருந்து வந்துள்ளாா். இவரது மனைவி இறந்து விட்டாா்.
முதல் முறையாக வாக்களிக்கும் முதியவர்
இவரது உறவினா்கள் சிலா் இறந்து விட்ட நிலையில், பேரன்கள் உள்ளபட உறவினா் களுடன் இருந்து வந்தாா். இவா் தனது வாழ்நாளில் வாக்களித்ததே இல்லை என்று கூறப்படு கிறது. இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளு க்கு முன்பு கன்னியப்பன் கொத்தடிமை யாக இருந்து மீட்கப் பட்டாா். 

இதனைத் தொடா்ந்து இவா் இன்று வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் அடிப்படை யில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் கந்தசாமி, கன்னியப்பன் உள்பட 7 பேரை அலங்கரிக்கப்பட்ட காரில் அழைத்து வந்தும், அவா்களுக்கு இனிப்பு வழங்கியும் அவா்களை உற்சாகப் படுத்தினாா்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings