சிவசேனாவில் இணைந்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதூர்வேதி !

0
காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாள ராக இருந்த பிரியங்கா சதூர்வேதி, பா.ஜனதா விற்கு பல்வேறு நிலைகளில் பதிலடியை கொடுத்தவர். 2019 தேர்தலில் உ.பி.யில் காங்கிரஸ் கட்சி தனியாக களமிறங்கி யுள்ளது. காங்கிரஸ் கட்சியிலிருந்து விலக்கப் பட்டவர்களும் இப்போது உள்ளே வரத் தொடங்கி யுள்ளனர், கட்சியும் அவர்களை ஏற்றுக் கொள்கிறது. 
சிவசேனாவில் இணைந்த பிரியங்கா சதூர்வேதி !


பிரியங்கா சதூர்வேதி யிடம் கடந்த ஆண்டு மதுராவில் தவறாக நடந்து கொண்டவரும் கட்சியில் மீண்டும் இணைக்கப் பட்டுள்ளார். இதனால் ஆத்திர மடைந்த பிரியங்கா சதூர்வேதி கட்சியின் மீதான கோபத்தை டுவிட்டரில் வெளி யிட்டார். காங்கிரஸ் கட்சியில் கட்சிக்காக வியர்வையை யும், இரத்தத்தை யும் கொடுத்தவர் களுக்கு மேலாக குண்டர்களின் குரல் உயரத் தொடங்கி யுள்ளது என வெளிப்படை யாக குற்றம் சாட்டினார். 

இது காங்கிரசு க்கு தர்ம சங்கடமான நிலையை ஏற்படுத்தியது. இதனை யடுத்து காங்கிரஸ் கட்சியி லிருந்து விலகுவதாக பிரியங்கா சதூர்வேதி அறிவித்தார். இதனை யடுத்து பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான சிவசேனாவில் இணைந் துள்ளார். காங்கிரசில் இருந்த போது பிரியங்கா சதூர்வேதி, பா.ஜனதா விற்கு பல்வேறு விவகாரங்களில் சரியான பதிலடியை கொடுத்தவர் ஆவார். பிரியங்கா சதூர்வேதியை சிவசேனா கட்சியும் வரவேற் றுள்ளது.

“நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்கப்பட வில்லை என்ற காரணத்திற் காக நான் கட்சியி லிருந்து விலகுகிறேன் என்பது முற்றிலும் தவறானது, அதில் உண்மை கிடையாது,” என பிரியங்கா சதூர்வேதி கூறியுள்ளார். பிரியங்கா சதூர்வேதியை வரவேற்றுள்ள சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே, “சிவசேனா தொண்டர் களுக்கு நல்ல சகோதரி கிடைத்துள்ளார்” என குறிப்பிட் டுள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings