காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இம்முறை வயநாடு மற்றும் அமேதி என இரு மக்களவைத் தொகுதிகளி லும் போட்டி யிடுகிறார். இதற்காக கடந்த 17-ம் தேதி கேரளாவின் கண்ணூர் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார் ராகுல் காந்தி. அப்பகுதியில் வசிக்கும் நந்தன் என்னும் ஏழு வயது சிறுவன் ராகுல் காந்தியை பார்க்க விரும்பி யுள்ளான்.
ராகுல் காந்தியின் ரசிகனாக கூறப்படும் அந்த சிறுவன் காலை 5 மணி முதலே ராகுல் காந்தியை பார்க்க காத்திருந் துள்ளான். தனது பெற்றோருடன் சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்த சிறுவனால் கடைசியில் ராகுல் காந்தியை பார்க்க முடியாமல் போனது.
സുരക്ഷാ തടസ്സങ്ങൾ മൂലം കണ്ണൂരിൽ രാഹുൽ ഗാന്ധിയെ നേരിൽ കാണാൻ കഴിയാതെ കരഞ്ഞ നദാൻറെ വിവരം അറിഞ്ഞ ജനനായകൻ അവനെ നേരിട്ട് വിളിച്ചു സംസാരിച്ചു.https://t.co/2ZDyjfi0N9— Rahul Gandhi - Wayanad (@RGWayanadOffice) April 18, 2019
’எனக்கு மிகவும் பிடித்தவர்’ என்ற பதாகை உடன் காத்திருந்த சிறுவனுக்கு ஏமாற்ற மாகியுள்ளது. ராகுலை காந்தியை பார்க்க முடியாமல் அழுது கொண்டிருந்த சிறுவனின் புகைப்படத்தை அச்சிறுவனின் தந்தை பேஸ்புக்கில் பதிவிட, அந்தப்பதிவு கேரளாவில் வைரலாகி உள்ளது.
A young boy in Kannur waited to see Rahul ji but couldn’t, read what happened next or get a Malayalam speaking friend to translate :) I did too. Such a sweet gesture by @RahulGandhi https://t.co/M7Nl01Bn9U— Divya Spandana/Ramya (@divyaspandana) April 18, 2019
இது கேரள காங்கிரசார் மூலம் ராகுல் காந்திக்கு தகவல் செல்ல உடன டியாக அவர், சிறுவன் நந்தனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதனால் மகிழ்ந்த அந்த சிறுவன், ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்து புதிய வீடியோ ஒன்றையும் வெளி யிட்டுள்ளான்.
Thanks for Your Comments