தமிழகத்தில் முதல் முறையாக வாக்குப்பதிவு ஏற்பாடுகள் மிகவும் மோசமாக செய்யப் பட்டுள்ளது.
மக்கள் வாக்களிக்க ஆர்வமாக இருந்தாலும் போதிய வசதிகள் செய்து கொடுக்கப் படாததால், தமிழகத்தில் வாக்கு சதவிகிதம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இன்று புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் 39 தொகுதிகளில் லோக்சபா தேர்தல் நடக்கிறது. அதே போல் நாடு முழுக்க 95 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் நடக்கும் தேர்தலில் பல பிரச்சனைகள் நிலவி வருகிறது. தேர்தல் தொடர்பாக சரியான ஏற்பாடுகள் செய்யப் படவில்லை என்று புகார்கள் எழுந்து இருக்கிறது.
பேருந்து கூட இல்லை
இந்த தேர்தலில் வாக்களிப் பதற்காக மக்கள் பல்வேறு நகரங்களில் இருந்து தங்கள் சொந்த ஊருக்கு கிளம்பி சென்றனர். ஆனால் போதிய பேருந்து இல்லாமல் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
போதிய பஸ்கள் இல்லாததால் மக்கள் மேற் கூரைகளிலும், படிக்கட்டுகளி லும் வாக்களிக்க பயணம் செய்யு நிலை ஏற்பட்டது. எந்த தேர்தலிலும் மக்கள் பேருந்து கிடைக்காமல் அவதிப்பட்டது கிடையாது.
எந்திரம் கோளாறு
அதேபோல் பல பகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதான தாலும் மக்கள் வாக்களிக்க முடியவில்லை.
தமிழகத்தில் பல இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறால், மக்கள் வாக்களிக்க முடியாமல் காத்திருக்கி றார்கள்.
இன்னும் பல இடங்களில் வாக்குப்பதிவு தொடங்கவே இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.
பூத் ஏஜென்ட்
அதேபோல் இந்த தேர்தலில் சரியான பூத் ஏஜென்ட்கள் நியமனம் செய்யப்பட வில்லை. யார் பூத் ஏஜென்ட், எங்கே நிற்கிறார் என்று எந்த வழி காட்டுதலும் வழங்கப் படவில்லை.
இதனால் வாக்களிக்க செல்லும் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
முதல் தடவை
தமிழகத்தில் முதல்முறை ஒரு தேர்தல் இவ்வளவு மோசமாக நடந்து வருகிறது. வேண்டும் என்ற ஏற்பாடுகளை சரிவர செய்யாமல் புறக்கணித்து இருக்கிறார்களா என்றும் கூட கேள்வி எழுந்துள்ளது.
தேர்தல் பணிகள் சரியாமல் நடக்காமல் இருப்பது மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Tags:
Thanks for Your Comments