கோவையில் 19 வயது கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கபடி பயிற்சி யாளரின் மகன் கைது செய்யப் பட்டுள்ளார். புகாரளித்த மாணவியை உறவினர்கள் மிரட்டுவ தாக மாணவி புகார் அளித்துள்ளார். கோவை ராஜ வீதியை சேர்ந்த 19 வயது மாணவி ஒருவர் தனியார் கல்லூரியில் முதலாமாண்டு இளங்கலை வணிகவியல் பயின்று வருகிறார்.
கபடி வீராங்கனை யான இவர், சுந்தரா புரத்தை சேர்ந்த விஷ்வநாதன் என்பவரிடம் மாலை நேரங்களில் இலவசமாக கபடி பயிற்சி பெற்று வருகிறார். இந்நிலையில் மாணவி களுக்கு பயிற்சி அளிக்கும் விஷ்வநாதனின் மகன் சஞ்சீவ்குமார், அந்த மாணவியிடம் ஆபாசமாக பேசியதோடு, பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படு கிறது.
மேலும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும், சஞ்சீவ் குமாருக்கு அவரது குடும்பத்தினர் உடந்தையாக இருப்பதா கவும் கூறி, சஞ்சீவ்குமார் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாணவி போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பொது இடத்தில் கெட்ட வார்த்தையில் பேசுவது, கொலை மிரட்டல், பெண்ணை பாலியல் தொல்லைப் படுத்தும் தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், சஞ்சீவ் குமாரை கைது செய்தனர்.
இந்நிலையில் புகாரை திரும்ப பெற கோரி, புகாரளித்த மாணவியின் வீட்டிற்கு சென்ற சஞ்சீவ்குமாரின் உறவினர்கள் தகராறு செய்து, கொலை மிரட்டல் விடுத்ததா கவும், தனக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரி மாணவி கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத் தில் புகார் அளித்தார்.
பயிற்சியாளர் விஷ்வநாதன் கபடி பயிற்சிக்கு வரும் மாணவி களை வீட்டு வேலை செய்ய சொல்வதா கவும், குளிப்பாட்டு மாறு கட்டாயப் படுத்துவதா கவும் மாணவி தெரிவித்தார்.
Thanks for Your Comments