கேரளாவில் 20 நாடாளுமன்றத் தொகுதி களுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்து வருகிறது. கண்ணூர் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச் சாவடியொன்றில் மக்கள் நீண்ட வரிசையில் வாக்களிக்கக் காத்திருந்தனர்.
வாக்குச்சாவடி மையத்தில் இருந்த ஒப்புகைச் சீட்டு வழங்கும் எந்திரம் ஆடியது. அதிலிருந்து சத்தம் வெளியாகியது. அதற்குள் பாம்பு இருப்பதை கண்ட வாக்களிக்க வந்த ஒருவர் அதிர்ச்சி அடைந்தார்.
பாம்பை பார்த்த பயத்தில் அவர் போட்ட சத்தத்தில் வாக்களிக்க வரிசையில் இருந்த மக்களும், தேர்தல் அறையில் இருந்த அதிகாரி களும் அலறியடித்து ஓட்டம் பிடிக்க தொடங்கினர்.
பின்னர் போலீசார் வந்து ஒப்புகைச்சீட்டு வழங்கும் எந்திரத்தில் இருந்த பாம்பை வெளியே எடுத்து காட்டுப் பகுதியில் விட்டனர். பின்னர் வாக்குச் சாவடியில் வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது. பாம்பு இருந்ததால் ஏற்பட்ட பரபரப்பு சம்பவத்தால் சிறிதுநேரம் வாக்குப்பதிவு தடைபட்டது.
Thanks for Your Comments