செல்லப் பிராணிகளில் முதலிடத்தை பிடிப்பது நாய். மனிதர் களுக்கு உற்ற நண்பனாகவும், நன்றியுள்ளவை யாகவும் திகழ்கிறது. இந்த நிலையில் நாய் ஒன்று தன்னை வளர்த்த எஜமானரை கடிக்க வந்த பாம்பை கொன்று உயிரை துறந்து விட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது பற்றிய விவரம் வருமாறு:-
தஞ்சையை அடுத்த வேங்கராயன் குடிகாடு பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 50). விவசாயி. இவருடைய மனைவி தேவகி. இவர்களு க்கு 2 மகன்கள் உள்ளனர். நடராஜன் ‘பப்பி’ என்ற ஆண் நாயை வளர்த்து வந்தார். தங்கள் குடும்பத்தில் ஒருவராக ‘பப்பி’யின் மீது பாசம் காட்டி நடராஜனும், அவரது குடும்பத் தினரும் வளர்த்து வந்தனர்.
நல்ல பாம்பு
நடராஜன் தினமும் காலையில் தனது தோட்டத்தில் நடைபயிற்சி செல்லும் போது நாய் ‘பப்பி’ யையும் உடன் அழைத்து செல்வது வழக்கம். நேற்று காலை வழக்கம் போல் அவர் தோட்டத்தில் நடைபயிற்சி சென்ற போது பப்பி’ யும் உடன் சென்றது. நடராஜனுக்கு பின்னால் ‘பப்பி’ வந்து கொண்டிருந்தது. வயல் வரப்பில் சென்ற போது 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்று வேகமாக ஊர்ந்து நடராஜனுக்கு முன்னால் வந்து அவரை கடிப்பதற் காக சீறியது.
இதைப் பார்த்த நாய் ‘பப்பி’ எஜமானரை கடிக்க முயன்ற பாம்பை கடித்தது. இதனால் நாய்க்கும், பாம்புக்கும் இடையே கடுமையான சண்டை நடந்தது. உடனடி யாக நடராஜன் ஒரு கம்பை எடுத்து பாம்பை அடித்து கொல்வதற் காக ஓடி வந்தார்.
உயிரை விட்டது
தொடர்ந்து நாயிடம் சண்டை போட முடியாத பாம்பு முட் புதருக்குள் சென்றது. ஆனால் அதை விடாமல் நாய் விரட்டி சென்று கடித்து குதறியது. நாய் கடித்து குதறியதால் பாம்பு இறந்தது. தன்னை கடிக்க வந்த பாம்பை, நாய் கடித்து குதறி கொன்றதை பார்த்த நடராஜன், நாயை கட்டி அணைத்து மகிழ்ச்சி அடைந்தார். பாம்பு கடித்து இருந்ததால் நாய் மிகவும் சோர்ந்து போய் இருந்தது.
இதனை யடுத்து நடராஜனின் குடும்பத்தினர், கால்நடை மருத்துவரு க்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் கால்நடை மருத்துவர் வருவதற்கு முன்பாக பாம்பின் விஷம் நாய் உடம்பு முழுவதும் பரவியதால் சிறிது நேரத்தில் கீழே விழுந்து நாயும் இறந்து விட்டது. தனது உயிரை காப்பாற்றிய நாய் இறந்து விட்டதே என நடராஜனும், அவரது குடும்பத்தி னரும் கண்ணீர் விட்டு அழுதனர்.
பின்னர் குழி தோண்டி இறந்த நாயையும், பாம்பையும் புதைத்தனர். எஜமானரை காப்பாற்ற தனது உயிரை கொடுத்த நாயின் நன்றியை எண்ணி அப்பகுதி மக்கள் பெருமிதம் அடைந்தனர்.
Thanks for Your Comments