லைனில் நின்று வாக்குப்பதிவு செய்த ஸ்டாலின் !

0
சென்னை தேனாம் பேட்டையில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாக்களித்தார். இன்று லோக்சபா தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. 
லைனில் நின்று வாக்குப்பதிவு செய்த ஸ்டாலின் !
இன்று புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் 39 தொகுதிகளில் லோக்சபா தேர்தல் நடக்கிறது. லோக்சபா தேர்தலுடன் சேர்த்து தமிழகத்தில் 18 தொகுதி களுக்கான சட்டமன்ற இடைத் தேர்தலும் நடக்கிறது. 

இந்த தேர்தலுக் காக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் வாக்களித்து வருகிறார்கள். அதிகாலையில் இருந்து முக்கிய நபர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். 

இந்த நிலையில் சென்னை தேனாம் பேட்டையில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாக்களித்தார். 

காலை 9.05 மணி அளவில் அவர் வாக்குப்பதிவு மையத்திற்கு வந்தார். அவருடன், மனைவி துர்கா ஸ்டாலினும் வாக்களிக்க வந்திருந்தார். 

9 மணிக்கு பிறகு ஸ்டாலின் வந்ததால் வாக்குப்பதிவு மையத்தில் பெரிய அளவில் கூட்டம் நிலவியது. இதனால் ஸ்டாலின் தனது மனைவியுடன் வரிசையில் காத்து இருந்தார், 

வெயிலில் 20 நிமிடம் வரை ஸ்டாலின் லைனில் காத்து இருந்தார். அதன்பின் 9.25 மணிக்கு வாக்குப்பதிவு மையத்திற்குள் சென்று தனது வாக்கை பதிவு செய்தார். 
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், ஒட்டு மொத்த வாக்காளர்களும் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும். 

ஜனநாயக அடிப்படையில் ஆட்சி மாற்றத்தை உருவாக்க வழிவகுக்க வேண்டும். தவறாமல் வாக்காளர்கள் ஓட்டளிக்க வேண்டும். 

பிற தேர்தல்களை விட இது முக்கியமான தேர்தல். தங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்க மக்கள் சரியாக வாக்களிக்க வேண்டும் என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings