இந்தியப் பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்க கடலில் 25-ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. அது இரு நாட்களில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது. 29-ம் தேதி புயலாக மாறுகிறது. இந்த புயல் தமிழகத்தை நோக்கி வர வாய்ப்பு உள்ளது.
இது தொடர்பாக பின்நாட்களில் நகர்வை ஆய்வு செய்கையில் தெரியவரும். தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. புயல் தமிழகத்தை கடந்தால் சென்னையி லிருந்து நாகைக்கு இடைப்பட்ட பகுதியில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரங்களில் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும், சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித் துள்ளது.
Thanks for Your Comments