புற்றுநோயி லிருந்து தப்பி உயிர் பிழைத்த பெண் ஒருவரின் திருமண போட்டோஷூட் தற்போது இணையத் தளத்தையே கலக்கி வருகிறது. 'நவி இந்திரன் பிள்ளை' என்ற அந்த பெண் மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்ட போது உடைந்தே போனார். அதற்கு பிறகு தனது வாழக்கை எப்படி இருக்க போகிறதோ என்று நினைத்து அழாத நாளே இல்லை.
ஆம் உயிர் கொல்லி நோயான கேன்சர் தான் இன்று உலகில் பலரும் பார்த்து பயப்படும் நோய். புற்றுநோய்க்கு தீர்வான கீமோதெரபி கிகிச்சைக்கு அதிக செலவு ஆகும் என்பது ஒரு புறம் இருந்தாலும், மறு பக்கம் அந்த சிகிச்சையினால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் தான் மிகவும் கொடுமை யானவைகள்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நாவியும் கீமோதெரப்பி சிகிச்சையை எடுத்து கொண்டார். இதனால் அவரது தலைமுடி மொத்தமும் கொட்ட தொடங்கியது. தற்போது புற்றுநோயி லிருந்து மீண்டு வந்துள்ள அவர் தன் காதலரை மணக்க முடிவு செய்தார்.
அச்சங்களும் தயக்கங்களும் இருந்த போதிலும் தனது முடிவில் உறுதியாக இருந்தார். திருமணத்துக் காக அவர் எடுத்த போட்டோஷூட் தான் தற்போது வைரலாகி வருகிறது.
அழகும் தைரியமும் நிறைந்த அந்த மணப்பெண் கூறும் போது "கேன்சர் நோயிலிருந்து மீண்டு வந்த நபராக என் காதலை கரம்பிடிக்கும் நாளை எண்ணி பல நாள் கனவு கண்டிருக்கிறேன். மணமகளாக அந்த உணர்வு எப்படி இருக்கும் என்று யோசித்தி ருக்கிறேன். கேன்சர் சிகிச்சையில் என் முடியை இழந்தது தான் நான் சந்தித்த மிக பெரிய கொடுமை. நான் அழகாய் இல்லை என்று நினைத்திருக்கிறேன்.
ஆனால் மனதின் அழகே சிறந்த அழகு என்பதை இப்போது உணர்ந்தி ருக்கிறேன். விளம்பரங்களில் காட்டப்படுவது இல்லை அழகு என்பதை உணர்த்துவ தர்க்கே இந்த புகைப்படங்கள்" என்று கூறியுள்ளார். மிகவும் வைரலாகி வரும் அவரது புகைப்படங்கள், புற்றுநோயில் போராடி கொண்டிருக்கும் பலருக்கு நம்பிக்கையை அதிகரித் துள்ளது.
Thanks for Your Comments