தேர்தலையோட்டி தமிழகத்தில் திரையரங்க காட்சிகள் ரத்து !

0
தமிழகத்தில் நாளை மக்களவை மற்றும் இடைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற உள்ளநிலையில் திரையரங்கில் பகல்நேர காட்சிகள் ரத்து செய்யப்படும் என திரையரங்கு உரிமையாளர் சங்க செயலாளர் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் திரையரங்க காட்சிகள் ரத்து
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டமாக நடைபெறுகிறது, அதன்படி கடந்த 11-ஆம் தேதி முதல்கட்ட தேர்தல் நடைப்பெற்றது. இந்நிலையில், இரண்டாம் கட்டமாக, தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் நாளை தேர்தல் நடைபெற உள்ளது.


காலை 7 மணி முதலே வாக்குப் பதிவு நடைபெற உள்ளதால், இன்று இரவுக்குள் தேர்தல் பணிகளை முழுவதுமாக முடிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனை யடுத்து வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

முன்னதாக அரசியல் கட்சிகள் தங்களுக்கு ஆதரவாக வாக்கு கேட்கும் பிரசாரத்தை நேற்றைய தினமே முடித்துள்ள நிலையில் திரைத்துறை பிரபலங்கள் பலரும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு கருத்துகளை சமூக வலை தளங்கள் வாயிலாக பரப்பி வருகின்றனர். 

100% வாக்குப்பதிவு என்ற இலக்குடன் தேர்தல் ஆணையம் பணியாற்றி வருகிறது. இந்தநிலை யில் நாளை வாக்குப்பதிவு நடைபெறு வதை யொட்டி மக்கள் அனைவரும் தங்களது ஜனநாயகக் கடமையை முதல் வேலையாக நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கில் திரையரங்கில் பகல்நேர காட்சிகள் ரத்து செய்யப்படும் என்று திரையரங்க உரிமை யாளர் சங்க செயலாளர் அறிவித்துள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings