மனைவியுடன் ஓட்டு போட்ட விஜயகாந்த் !

0
சாலி கிராமத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் தனது குடும்பத்தின ருடன் சென்று வாக்களித்தார். விஜயகாந்த்துக்கு கொஞ்ச காலமாகவே உடம்பு சரியில்லை. அதனால் கூட்டணி, சீட் பஞ்சாயத்து, பிரச்சாரம் என அரசியல் விவகாரங்களில் அவரால் முழுமையாக ஈடுபட முடியவில்லை.
மனைவியுடன் ஓட்டு போட்ட விஜயகாந்த்


பிரச்சாரம் முடிவதற்கு ஒருநாள் முன்பு, சென்னையில் 3 தொகுதிகளில் தேமுதிக, அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு வாக்கு சேகரித்தார். அந்த சமயத்தில் அவரால் பழைய மாதிரி பேச முடியவில்லை. பேசியதில் ஒருசில வார்த்தை களும் புரியவில்லை.

சாலி கிராமம்

இந்நிலையில், சாலிகிராமம் பகுதியில் உள்ள வாக்கு சாவடிக்கு விஜயகாந்த் வாக்களிக்க வந்தார். அவருடன் சுதீஷ், பிரேமலதா உள்ளிட்ட குடும்பத்தினர் எல்லாருமே வந்திருந்தனர்.

கூலிங் கிளாஸ்

அவரை ஒரு கையால் பிடித்தபடி அழைத்து வந்திருந்தனர். பூத்துக்கு உள்ளே போனதும் பக்கத்தில் இருந்தவர் கூலிங் கிளாஸை எடுத்து தரவும் அதை விஜயகாந்த் வாங்கி மாட்டி கொண்டார்.

கட்டை விரல்

பிறகு தனது வாக்கு பதிவு செய்தார். எல்லாரும் ஓட்டு போட்டுவிட்டு மை வைத்த விரலை காட்டுவார்கள் என்றால், விஜயகாந்த்தோ தனது கட்டை விரலை காட்டி பெருமிதப் பட்டார். அதே கூலிங் கிளாஸோடு வெளியே அழைத்து வரப்பட்டார் விஜயகாந்த், குடும்பத்துடன் அங்கிருந்து கிளம்பி சென்றார்.


குழம்பிய விஜயகாந்த்

கடந்த முறை விஜயகாந்த் ஓட்டுப் போட வந்த போது அவர் எந்த சின்னத்திற்கு ஓட்டுப் போடுவது என்று தெரியாமல் குழம்பி தனது மனைவியைப் பார்த்தார். 

இதை யடுத்து உள்ளே போன பிரேமலதா விஜயகாந்த், விஜயகாந்த் எந்த சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்பதை சுட்டிக் காட்டியதால் சலசலப்பு ஏற்பட்டது. ஆனால் இந்த முறை அந்தக் குழப்பம் ஏதும் நடந்ததா என்று தெரிய வில்லை.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings