ராகுல் காந்தியின் சான்றிதழ் எங்கே? - அருண் ஜெட்லி !

0
முன்னதாக நேற்று முன்தினம் மக்களவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த ஸ்மிருதி இராணி தான் பட்ட படிப்பு ஏதும் படிக்க வில்லை என வேட்புமனுவில் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் கடந்த 2014-ஆம் ஆண்டு அமேதி நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிட்ட ஸ்மிருதி இராணி அப்போது தனது வேட்புமனுவில் பட்டதாரி எனக் குறிப்பிட்டிருந்தார்.
ராகுல் காந்தியின் சான்றிதழ் எங்கே?
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் பட்டதாரி என குறிப்பிட்ட இராணி தற்போது தான் பட்டதாரி இல்லை என குறிப்பிட்டுள்ளது அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளது.


இதுகுறித்து காங்கிரஸ் தரப்பினர் உள்பட பலர் கேள்வி எழுப்பி யுள்ளனர். இந்நிலையில் தற்போது இராணியின் பட்ட படிப்பு பற்றி கேள்வி எழுப்பும் காங்கிரஸ் கட்சியினர் ஏன் ராகுல் காந்தி பட்டைய படிப்பு பற்றிய கேள்வி களுக்கு பதில் அளிக்க முன் வரவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.

அதாவது, ராகுல் காந்தி டிரைனிட்டி கல்லூரி மாணவர் எனவும், அவர் 1995-ஆம் ஆண்டு மேம்பாட்டு கல்வி பாடத்தில் எம்.பில்., பட்டம் பெற்றவர் எனவும் கேம்பிரிட்ஜ் பல்கலை கழகம் கடந்த 2009-ஆம் ஆண்டு அறிவித்தது. ஆனால் பட்ட மேற்படிப்பு முடிக்காத ராகுல் எவ்வாறு எம்.பில்., டிகிரி முடித்தார் என கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது...
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings