கணவருக்காக பள்ளிவாசல் கட்டிய பெண் வைரலாகும் புகைப்படம் !

0
இறந்த கணவருக் காக தன் கணவர் பெயரிலேயே பள்ளிவாசல் கட்டியுள்ளார் சவூதி நாட்டை சேர்ந்த பெண்மணி. 
கணவருக்காக பள்ளிவாசல் கட்டிய பெண் வைரலாகும் புகைப்படம் !

30 வருடமாக வந்த கணவரின் பென்சன் பணத்தை சேமித்து செய்த இந்த செயலால் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறார்.


பொதுவாகவே, கணவனிடம் வாழப் பிடிக்க வில்லை என்று விவாகரத்து செய்யும் பெண்களையும், கணவன் தலையில் கல்லைப் போட்டுக் கொல்லும் பெண்களைப் பற்றிய செய்தி களையும் தான் அடிக்கடி நாம் படித்திருக் கிறோம்.

இது போக ஜீவனாம்சமாக பல கோடி தரவேண்டும், ஆடம்பர வாழ்க்கை அமைத்துத் தர வேண்டும் என்று 

நீதிமன்றம் செல்லக் கூடிய பெண்கள் மத்தியில், அன்பு, பாசம் மற்றும் காதலை பறை சாற்றும் விதமாக முன்னுதாரண மாக இருக்கிறார் சவூதி நாட்டை சேர்ந்த பெண். 

இறந்த தன் கணவருக்காக, அவர் பெயரில் வரும் பென்சன் பணத்தை சிறுக, சிறுக சேமித்து, அந்த பணத்திலேயே குறித்த பெண் கணவர் பெயரில் ஒரு பள்ளிவாசலை கட்டியுள்ளார்.

இவரது மகன் முஹம்மது அல் ஹர்பி தனது ட்விட்டரில், நீங்கள் எவ்வளவு சிறந்தவர் அம்மா, நீங்கள் நினைத்திருந்தால் அத்தாவின் பென்சன் பணத்தில் ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்திருக் கலாம். 

ஆனால் ஒவ்வொரு ரியாலையும் சேமித்து வைத்து தந்தையின் பெயரிலேயே பள்ளிவாசலை உருவாக்கி யுள்ளீர்கள். தந்தைக்கு இறைவன் சொர்கத்தை அருள்வானாக” என்று பதிவு செய்துள்ளார்.

இந்த பதிவு, தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. சொர்க்கத்தில் உங்கள் இருவரையும் இணைப்பானாக என்று மக்கள் அவர்களுக்கு வாழ்த்தையும், பாராட்டையும் தெரிவித்து வருகிறார்கள். 


நாமும் அதே வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். மும்தாஜ் மீது கொண்ட காதலால் தாஜ்மகாலை கட்டினார் ஷாஜகான். அது காதலின் அடையாள சின்னமாக கருதப்பட்டு, உலக அதிசயமாக இருக்கிறது. 

ஆனால் அதை விட, இறந்த கணவருக்காக 30 வருடங்களாக சேமித்து வைத்த பணத்தில் இந்த ஏழை பெண்மணி கட்டிய பள்ளிவாசல் சிறந்தது என்றால் மிகையாகாது. 


இறந்த கணவரை நினைத்து உருகுகிறார் இப்பெண். ஆனால் நாமோ, வாழும் போதே சின்ன சின்ன சண்டைகளை எல்லாம் பெரிதாக்கி இறுதியில் விவாகரத்தில் வந்து நிற்கிறோம்.

இப்பெண்மணியை போல, கணவன் மனைவி இருவரும் ஒருவருக் கொருவர் புரிந்து கொண்டு வாழ்ந்தால், விவாகரத்து என்ற பேச்சிற்கே இடமிருக்காது என்பதே உண்மை. 

ஒவ்வொரு கணவரும் தன் மனைவிக்கும், ஒவ்வொரு மனைவியும் தன் கணவருக்கு இதை பகிர்ந்து அன்பை வெளிப் படுத்துங்கள்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings