மெக்சிகோ நாட்டின் தலைநகரான மெக்சிகோ சிட்டியில் இருந்து சுமார் 40 பயணி களுடன் டோர்ரியோன் நகரை நோக்கி ஒரு சொகுசு பேருந்து சென்று கொண்டிருந்தது.
(உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக் கிழமை அதிகாலை) ஜகட்டெகஸ் நகராட்சிக்கு உட்பட்ட சாலையில் ஒரு குறுகிய வளைவில் திரும்பிய போது டிரைவரின் கட்டுப் பாட்டை இழந்த பஸ் சாலையை விட்டு விலகி பக்க வாட்டில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 11 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
காயமடைந்த சுமார் 20 பேர் அருகாமையில் உள்ள மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வரும் சிலரது நிலைமை கவலைக் கிடமாக உள்ளதால் இந்த விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப் படுவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
Thanks for Your Comments