நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு தான் எனது அரசியல் வாழ்க்கை துவங்கும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித் துள்ளார். சேலம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளரை ஆதரித்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று (ஞாயிற்றுக் கிழமை) பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் அதிமுக அரசு நிறைவேற்றிய திட்டங்களை மக்களிடம் பட்டியலிட்டு விளக்கினார்.
தொடர்ந்து பேசிய அவர், "திமுக தலைவர் ஸ்டாலின், தேர்தலுக்கு பிறகு பழனிசாமியின் அரசியல் வாழ்க்கை கிழியும் என்று கூறி யிருக்கிறார். தேர்தலுக்கு பிறகு தான் பழனிசாமியின் அரசியல் வாழ்க்கை தொடங்கும். நீங்கள் கண்ட கனவு நிறைவேறாது. உங்களுடைய கனவு கானல் நீர் ஆகி போகும். அதிமுகவை உடைக்க நினைத்தீர்கள் முடிய வில்லை. ஆட்சியை அகற்றி கைப்பற்ற நினைத்தீர்கள் முடிய வில்லை.
நீங்கள் போட்ட திட்டம் அனைத்தையும் தவிடு பொடியாக்கி விட்டோம். நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் வருகிறது. இதில் நூற்றுக்கு நூறு சதவீதம் எங்களது கூட்டணி வெற்றி பெற விருக்கிறது. புதுச்சேரி உட்பட 40 நாடாளுமன்றத் தொகுதிகளில் 40-க்கு 40 -இல் வெற்றி பெறுவோம். இடைத் தேர்தல்களில் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு வேட்பாளர் களை அறிவித் துள்ளோம்.
மொத்தம் அறிவிக்கப் பட்டுள்ள 22 தொகுதி இடைத் தேர்தல்களிலும் அதிமுக வெற்றி பெறும். தமிழகம் முழுவதும் சுற்றி வந்துள்ளேன். நான் செல்லும் இடமெல்லாம் மக்கள் ஆரவாரத்தோடு மகிழ்ச்சியோடு வரவேற்பதை பார்க்க முடிகிறது. சேலம் மாவட்ட மக்கள் விஸ்வாசமான மக்கள். சேலம் மக்களுக்காக நிறைய திட்டங்களை நிறைவேற்றி தந்திருக் கிறேன். இந்த மாவட்டம் முதல்வரை பெற்ற மாவட்டம். நான் இங்கு தொண்டனாக பேசுகிறேன்.
உங்களில் ஒருவனாக பேசுகிறேன். சேலம் மாவட்ட மக்கள் எனக்கு முதல்வர் பதவியை வழங்கியிருக் கிறார்கள். எனது பெருமை, உங்களது பெருமை. இந்த நாடாளு மன்றத்தில் அதிமுக பெறும் வெற்றி உங்களையே சேரும்" என்றார். முன்னதாக, திருச்சி தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் நேற்று பேசிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், "முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களே, கொஞ்சம் பொறுங்கள்!
தேர்தல் முடிவுகள் வரட்டும். தேர்தல் முடிவுகள் வந்ததற்குப் பிறகு, திமுக ஆட்சி தமிழ் நாட்டில் உருவானதற்குப் பிறகு, உங்கள் வாழ்க்கையே கிழிய போகின்றது பார்த்துக் கொள்ளுங்கள்" என்றார்.
Thanks for Your Comments