போலீஸ்.. போலீஸ்.. என்ற திடீர் சத்தத்தை கேட்டதும்.. போலீஸ் காரர்களே அரண்டு போய் விட்டார்கள்.. ஏன்? எதற்காக? பிரேசிலில் பியாயு மாகாணத்தில் தான் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. குரூப் போதைப் பொருளை கடத்தும் தொழிலை செய்து வந்திருக்கி றார்கள். அவர்கள் எமகாதகர்களாம்..
போலீசுக்கு ரொம்ப காலமாகவே டிமிக்கு தந்து வந்திருக்கிறார்கள். இதனால் அவர்களை பிடிப்பது போலீசுக்கு பெரிய சவாலாம். அப்படியே பொறி வைத்து இந்த கும்பலை போலீசார் பிடிக்க வந்தாலும் எப்படியாவது கண்ணில் மண்ணை தூவி எஸ்கேப் ஆகி விடுவார்களாம்! எப்படி, யார் இவர்களுக்கு தகவல் தந்து தப்புகிறார்கள் என போலீசார் மண்டையை குடைந்து கொண்டார்கள்.
போலீஸ்.. போலீஸ்..
அதனால் இந்த முறை கடத்தல் கும்பலை பிடித்து விட வேண்டும் என்று போலீஸ்கார்கள் ஒரு முடிவெடுத்து விட்டார்கள். அதனால் கடத்தல் காரர்கள் இருந்த இடத்தை சுற்றி வளைத்து அந்த இடத்தின் உள்ளே நுழைந்தும் விட்டார்கள். ஆனால் திடீரென்று ஒரு சத்தம்.."போலீஸ்.. போலீஸ்.." என்று!
கேடி ஓனர்கள்
குரல் வித்தியாசமாக இருக்கவும் சுற்று முற்றும் பார்த்தால், அங்கிருந்த கிளி தான் கத்தியது. கிளி சத்தம் போட்டதும், கேடி ஓனர்கள் திரும்பவும் எஸ்கேப்! இப்படி அலர்ட் செய்வதற் காகவே அந்த கும்பல் கிளியை வளர்த்திருக்கி றார்களாம்.
நொந்து போனார்கள்
உடனடியாக அந்த கிளியை ஸ்டேஷனுக்கு தூக்கி சென்றார்கள் போலீசார். கிளியிடம் விசாரணை ஆரம்பமானது. என்னன்னமோ கேள்வி கேட்டார்கள், எப்படி எப்படியோ பேசிப் பார்த்தார்கள்.. ஆனால் கிளி வாயே திறக்க வில்லை. இதனால் போலீசார் ரொம்பவே நொந்து போய் டயர்ட் ஆகி விட்டார்கள்.
கிளிக்கு சிறை
இதனால் குற்றவாளி களை தப்பவிட்ட கிளியை ஜெயிலில் போட்டார்கள்.. அதாவது உள்ளூர் விலங்கு காட்சி சாலையில் கொண்டு போய் விட்டு விட்டார்கள். 3 மாசத்துக்கு அப்பறம்தான் கிளிக்கு ரிலீஸாம்.. ஏனென்றால் அந்த கிளிக்கு பறக்கவே தெரியாதாம். போலீஸ் என்ற வார்த்தையை தவிர வேறு எதுவும் சொல்லி தரவும் காணோம். அதனால் முதலில் பறப்பதற்கு பயிற்சி தரப்பட்டு, அதற்கு பிறகு பறக்க விடப்படும் என சொல்லப் படுகிறது.
Thanks for Your Comments