கோதையாறு மின் உற்பத்தி நிலையத்தில் போலீஸ்காரர் துப்பாக்கி யால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் காதல் தகராறில் தற்கொலை செய்து கொண்டரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள சாத்தான்கோடு பகுதியை சேர்ந்த பால்ராஜ் மகன் அஜின்ராஜ் (வயது 26).
இவர், நெல்லை மாவட்டம் மணி முத்தாறில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் பேச்சிப்பாறை அணை பகுதியில் உள்ள கோதையாறு நீர்மின் உற்பத்தி நிலையம் 1-ல் அஜின்ராஜை பாதுகாப்பு பணியில் நியமித்தனர். நேற்று காலை அஜின் ராஜூம், கணேசன் என்ற இன்னொரு போலீஸ்காரரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கணேசன் வெளியே சென்று இருந்தார்.
துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
அவர் திரும்பி வந்து பார்த்த போது, அங்கு அஜின்ராஜ் துப்பாக்கி யால் தன்னைத் தானே சுட்டு க்கொண்டு இறந்து கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கணேசன் பேச்சிப்பாறை போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் கோதையாறு மின் நிலையத் துக்கு விரைந்து வந்து அஜின்ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அஜின்ராஜ் தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
காதலி போராட்டம்
விசாரணை யில் ‘அஜின் ராஜூம், அதே ஊரை சேர்ந்த கல்லூரி மாணவியும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். அவருக்கு 2 ஆண்டுகளு க்கு முன் போலீசில் வேலை கிடைத்தது. அதன்பிறகு அஜின்ராஜ், காதலியை சந்திப்பதை தவிர்த்து வந்ததாகவும், திருமணம் செய்ய மறுத்ததா கவும் கூறப் படுகிறது.
இதனால் காதலி அவரது வீட்டுக்கு சென்று தர்ணா போராட்டம் நடத்திய தாகவும் இது தொடர்பாக அவர்களு க்குள் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Thanks for Your Comments