சென்னை அருகேயுள்ள கொரட்டூர் பஜனை கோவில் தெருவில் வசித்து வந்தவர் சங்கர். இவரது மனைவிக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில், சங்கர் குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் வெளிவந்த சமயத்தில் உயிரிழந்தார்.
இதற்கு பின்னர் சங்கரின் மனைவியான தேவி தனியாக தனது மகள்களுடன் வாழ்ந்து வந்த சூழலில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனையில் தற்காலிகமாக பணி செய்து வந்தார். அந்த நேரத்தில், அதே பகுதியை சார்ந்த தங்கராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
தங்கராஜ் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் நிலையில், இவர்கள் இருவருக்கும் இடையான பழக்கம் திருமணம் முடியாமல் சேர்ந்து வாழ வைத்துள்ளது. இவர்கள் இருவரும் கடந்த 6 வருட காலங்களாக சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
தங்கராஜுக்கும் ஏற்கனவே திருமணம் ஆன நிலையில், மனைவியை பிரிந்து தேவியுடன் உள்ள இரண்டு மகள்கள் மற்றும் தங்கராஜின் மகன் என அனைவரும் சேர்ந்து ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில், வாடகை வீட்டில் தங்கியிருந்த தேவி மற்றும் அவரது குடும்பத்தி னரின் செலவை தேவியே கவனித்து வந்துள்ளார்.
தங்கராஜ் குடும்பத்திற்கு தேவையான பணம் ஏதும் வழங்காமல், மது அருந்தி விட்டு போதையில் மிதந்து வந்துள்ளார். இதனால் இவர்களு க்குள் அடிக்கடி குடும்ப தகராறு நடந்து வந்துள்ளது.
இந்த நிலையில், வழக்கம் போல மது அருந்தி விட்டு வந்த தங்கராஜிடம் வாடகை பணத்தை தேவி கேட்கவே, அவர்களு க்குள் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், வாடகை பணம் தராவிட்டால் தற்கொலை செய்து விடுவதாகவும் தேவி மிரட்டியுள்ளார்.
இதனைக்கேட்ட தங்கராஜ், நீ தற்கொலை செய்து கொள்ள வேண்டாம், நானே உன்னை மண்ணெண்ணையை ஊற்றி கொலை செய்து விடுகிறேன் என்று கூறி விட்டு, மண்ணெண்ணையை ஊற்றி அவரை கொலை செய்து சம்பவ இடத்தில் இருந்து தப்பி யோடியுள்ளார்.
தீப்பற்றி எரிந்த நிலையில், தீயின் தாக்கம் தாங்க முடியாமல் அலறி துடித்த தேவியின் அலறல் சத்தத்தைக் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவ மனையில் சேர்த்தனர். இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து தேவியின் வாக்கு மூலத்தை பெற்றுள்ளனர்.
இதற்கு பின்னர் தங்கராஜை கைது செய்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது, தங்கராஜிடம் தற்போது காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Thanks for Your Comments