தாமிரம் அல்லது செம்பு பாத்திரத்தில் நிரப்பப்பட்ட தண்ணீரை குடித்தால் நாம் ஆரோக்கிய மாக இருக்கலாம் என்பது பழங்காலமாக இந்தியாவில் நிலவி வரும் நம்பிக்கை யாகும். பானை அல்லது குடம் வடிவத்தில் உள்ள தாமிர பாத்திரத்தில் நம் தாத்தா பாட்டி தண்ணீர் பருகுவதை நாம் கண்டிருப்போம்.
தாமிர பாத்திரத்தில் நிரப்பப்பட்ட தண்ணீரால் கிடைக்கும் உடல் நல பயன்களை பெறுவதற்கு பலரும் தண்ணீரை தாமிர கோப்பையில் நிரப்பி பருகுகின்றனர். ஆனால் இந்த நம்பிக்கையில் அறிவியல் சார்ந்த உண்மை ஏதேனும் உள்ளதா? வாங்க பார்க்கலாம்!
தாமிர பாத்திரத்தில் தண்ணீர் பிடியுங்க..!
குடிக்கும் தண்ணீரில் சிறிதளவு செம்பு போட்டு வைத்து அந்த தண்ணீரை குடித்தால் உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கும். அல்லது, தாமிர பாத்திரத்தில் குடிக்கும் தண்ணீரை பிடித்து வைத்து அருந்தலாம்.
தாமிர பாத்திரம் இல்லை என்றாலும், நம் வீட்டில் பயன்படுத்தும் சாதாரண பிளாஸ்டிக் குடங்களாக இருந்தாலும் சரி, ஒரு சிறிய தாமிர துண்டை குடத்தில் போட்டு வைத்தால் போதும். எந்த சத்தும் இல்லாத கேன் வாட்டர் கூட, நல்ல சத்து நிறைந்த தண்ணீராக மாறி விடும்
தாமிர பாத்திரத்தில் ஊற்றி வைத்த தண்ணீரை அருந்துவதால், செரிமானத்தை மேம்படுத்தும். இதனால் செரிமானம் சிறப்பாக நடைபெறும். அதனால் தான் தாமிரம் கலந்துள்ள தண்ணீரை பருகினால் ஆரோக்கிய மான செரிமான அமைப்பை பெற்றிடலாம். இரத்த சோகையை எதிர்க்கும் நம் உடலில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியின் அதிகரிக்க தாமிரம் உதவுகிறது.
இரத்த சோகையை எதிர்க்க இரும்பு மிக முக்கிய மானதாக கருதப்படுகிறது. இதற்கு தாமிரமும் சிறிய அளவில் தேவைப்படும். கர்ப்ப காலத்தின் போது உங்களையும் உங்கள் குழந்தையும் பாதுகாக்க உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி விசேஷ சவாலை சந்திக்கும். அதனால் கர்ப்ப காலத்தில் தாமிர பானையில் உள்ள தண்ணீரை குடித்தால் தொற்றுக்கள் மற்றும் நோய்வாய் படாமல் பாதுகாப்போடு இருக்கலாம்.
புற்று நோய்க்கு எதிராக பாதுகாக்கும் தாமிரத்தில் சிறப்பான ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள் அடங்கி யுள்ளது. அதனால் தான் புற்றுநோய் அணுக்கள் வளர விடாமல் அது மேலும் இயக்க உறுப்புகளால் உடலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்ய இது உதவும். தாமிர பாத்திரத்தில் வைக்கப்பட்ட தண்ணீர் அருந்துவதால் இது போன்ற எண்ணிலடங்கா பலன்கள் நமக்கு கிடைக்கும்.
Thanks for Your Comments