கொளுத்தும் வெயிலில் பெண்ணை கட்டி வைத்து தண்டித்த குடும்பம் !

0
பிலிப்பைன்ஸ் நாட்டு பணிப்பெண் ஒருவரை சவுதி அரேபிய குடும்பம் ஒன்று கொளுத்தும் வெயிலில் மரத்தில் கட்டி வைத்து தண்டனை அளித்த சம்பவம் சமூக வலைத் தளங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தி யுள்ளது. சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் உள்ள பணக்கார குடும்பம் ஒன்றில் கடந்த பல மாதங்களாக பணிப் பெண்ணாக பணியாற்றி வந்துள்ளார் 26 வயதான அகோஸ்டா பரூலோ.
கொளுத்தும் வெயிலில் பெண்ணை கட்டி வைத்து தண்டித்த குடும்பம்


சம்பவத்தன்று விலை உயர்ந்த மரச்சாமான் களை அவர் கொளுத்தும் வெயிலில் விட்டு விட்டு வேறு பணிகளில் மும்முரமாகி யுள்ளார். இது அந்த குடும்ப உறுப்பினர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தி யுள்ளது. இதனை யடுத்து அகோஸ்டாவை கொளுத்தும் வெயிலில் மரத்தில் கட்டி வைத்து தண்டனை அளித்துள்ளனர்.
இதை அவருடன் பணியாற்றிய பிலிப்பைன்ஸ் நாட்டவர் புகைப்படமாக பதிவு செய்து  சமூக வலை தளத்தில் பதிவேற்றி யுள்ளார். இந்த விவகாரம் சமூக வலை தளத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், பிலிப்பைன்ஸ் வெளிவிவகார அமைச்சகம் தலையிட்டு, அவரை உடனடியாக தாயகம் திரும்ப நடவடிக்கை மேற்கொண் டுள்ளது.

அவர் பிலிப்பைன்ஸ் திருபியதாக வும் வெளி விவகார அமைச்சக அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்கா வில் சுமார் 2.3 மில்லியன் பிலிப்பைன்ஸ் மக்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் சரிபாதி பெண்கள் என கூறப்படுகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings